Breaking News
Home / விளையாட்டு

விளையாட்டு

டென்னிஸ் ஜாம்பவான் ரபேல் நடால் மீண்டும் பயிற்சியை தொடங்கினார்

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஸ்பெயினும் ஒன்று. இதனால் நட்சத்திர டென்னிஸ் வீரர் நடால் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக பயிற்சி மேற்கொள்ள முடியாமல் இருந்தார். தற்போது ரசிகர்கள் இல்லாமல் மைதானங்களை திறக்க ஸ்பெயின் அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் நடால் மல்லோர்காவில் உள்ள ரபேல் நடால் அகாடமியில் பயிற்சியை தொடங்கியுள்ளார். தான் பயிற்சிபெறும் வீடியோவை வெளியிட்டு நடால் கூறியதாவது:- ஒவ்வொருவருக்கும் வணக்கம். தற்போது நான் ஆடுகளத்துக்கு மீண்டும் திரும்பியுள்ளேன். …

Read More »

கடந்த 10 ஆண்டுகளில் தலைசிறந்த கேப்டனாக எம்எஸ் டோனி இருந்துள்ளார்: இயான் பிஷப்

வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் இயான் பிஷப் கடந்த 10 ஆண்டில் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களைக் கொண்டு அணியை உருவாக்கியுள்ளார். அந்த ஒருநாள் அணிக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனியை கேப்டனாக தேர்வு செய்துள்ளார். இணையதளத்தில் கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே உடனான உரையாடலில், தன்னுடைய தலைசிறந்த ஒருநாள் அணியின் விவரங்களை பகிர்ந்துகொண்டார். அதில் பிஷப் லெவனின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னரும் …

Read More »

ஸ்ரீ லங்கா பிரீமியர் லீக் போட்டி மீண்டும்.

பல வருடங்களாக நடாத்தப்படாமலிருந்த ஸ்ரீ லங்கா பிரீமியர் லீக் இருபதுக்க இருபது போட்டியினை மீண்டும் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா இதனை தெரிவித்துள்ளார். குறித்த போட்டியினை எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

வெஸ்ட் இண்டீஸ் அணி 8-ந்தேதி இங்கிலாந்து பயணம்: 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது

இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான டெஸ்ட் தொடர் ஜூன் 4 முதல் 29-ந்தேதி வரை நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஜூலை 1 வரை தொழில்முறை கிரிக்கெட் ஆட்டத்திற்கு தடை விதித்துள்ளதால், இங்கிலாந்தில் நடைபெற இருந்த இந்த டெஸ்ட் தொடர் ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே இந்த சீசனில் போட்டிகள் எதுவும் இங்கிலாந்தில் நடைபெறாமல் போனால் ரூ. 3,553 கோடி நஷ்டம் ஏற்படும் என்று இங்கிலாந்து …

Read More »

விராட் கோலி தாடியை கிண்டல் செய்த பீட்டர்சன்

கொரோனா ஊரடங்கால் இந்தியாவே கடந்த 2 மாதங்களாக முடங்கிக் கிடக்கிறது. தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருப்பதால், படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக சலூன்கள் மற்றும் அழகு நிலையங்கள் திறக்கப்படவில்லை. இதனால் பிரபலங்கள் உட்பட ஏராளமானோர் தங்களது முடி மற்றும் தாடியை திருத்திக் கொள்ள முடியவில்லை. அந்த வகையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி இன்ஸ்டாகிராமில் ஒரு …

Read More »

தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் அணி கேப்டன் பதவியை குறிவைக்கும் டீன் எல்கர்

தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தவர் டு பிளிஸ்சிஸ். சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிரான தொடரை இழந்ததால் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். ஒயிட்-பால் கிரிக்கெட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் குயிண்டன் டிக் டெஸ்ட் அணிக்கும் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், டி காக்கிற்கு அதிகமாக சுமையை கொடுக்க விரும்பவில்லை. அதனால் டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு அவரை கேப்டனாக நியமிக்கமாட்டோம் என்று தென்ஆப்பிரிக்கா …

Read More »

உலகின் பணக்கார வீராங்கனை: செரீனாவை பின்னுக்கு தள்ளிய ஒசாகா

உலகளவில் அதிகமாக சம்பாதிக்கும் டென்னிஸ் வீராங்கனை என்ற பெருமையை ஜப்பான் வீராங்கனை ஒசாகா பெற்றுள்ளார். கடந்த ஆண்டு ஒசாகா இந்திய ரூபாய் மதிப்பில் 284 கோடி ரூபாய் (37.4 மில்லியன் அமெரிக்க டாலர்) சம்பாதித்துள்ளார். இதன் மூலம் பணக்கார விளையாட்டு வீராங்கனை என்ற பெருமையை நான்கு ஆண்டுகளாக வகித்து வந்த செரீனா வில்லியம்சை (36 மில்லியன் அமெரிக்க டாலர்) ஒசாகா முந்தினார். மரியா ஷரபோவா 2015-ம் ஆண்டு 29.7 மில்லியன் …

Read More »

இலங்கை கிரிக்கட் அணியின் பிரபல பந்துவீச்சாளரிடம் ஹெரோயின் போதை பொருள்….!

ஹெரோயின் ரக போதைபொருள் 700 மில்லி கிராமுடன் கைது செய்யப்பட்ட இலங்கை அணியின் பிரபல பந்துவீச்சாளர் எதிர்வரும் 02 ஆம் திகதி- வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குளியாப்பிட்டிய நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் செஹான் மதுசங்கவே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் விளையாடிய முதலாவது கிரிக்கெட் போட்டியில் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More »

ஐபிஎல் போட்டியால் தான் இங்கிலாந்து கிரிக்கெட் வளர்ந்துள்ளது – பட்லர்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் ஜோஸ் பட்லர். இவர் ஐ.பி.எல். போட்டியில் முதலில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார். தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக கடந்த 2 ஆண்டாக ஆடி வருகிறார். இந்த நிலையில் உலக கோப்பைக்கு பிறகு ஐ.பி.எல் போட்டியே சிறந்தது என்று பட்லர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது;- இங்கிலாந்து கிரிக்கெட் ஐ.பி.எல். போட்டியால் தான் வளர்ந்துள்ளது. இதில் எந்த சந்தேகமும் இல்லை. …

Read More »

உலக கோப்பைக்கு பிறகு ஐ.பி.எல். போட்டியே சிறந்தது: இங்கிலாந்து வீரர் பட்லர் சொல்கிறார்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் ஜோஸ் பட்லர். இவர் ஐ.பி.எல். போட்டியில் முதலில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார். தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக கடந்த 2 ஆண்டாக ஆடி வருகிறார். இந்த நிலையில் உலக கோப்பைக்கு பிறகு ஐ.பி.எல் போட்டியே சிறந்தது என்று பட்லர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது;- இங்கிலாந்து கிரிக்கெட் ஐ.பி.எல். போட்டியால்தான் வளர்ந்துள்ளது. இதில் எந்த சந்தேகமும் இல்லை. இதில் …

Read More »
error: Content is protected !!