மகனின் பெயரில் சட்டவிரோத மருத்துவ நிலையம் நடத்திய தந்தை.!

மகனின் பெயரில் சட்டவிரோத மருத்துவ நிலையம் நடத்திய தந்தை.!

மருத்துவர் போன்று நடித்து சட்டவிரோத மருத்துவ நிலையம் ஒன்றை நடத்தி வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கை பியகம பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குறித்த போலி மருத்துவர் பதிவு செய்யப்பட்ட மருத்துவரான தனது மகனின் பெயரைப் பயன்படுத்தி இந்தச் சட்டவிரோத மருத்துவ நிலையத்தை நடத்தி வந்துள்ளமை பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அத்துடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மஹர நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.