14வது ஆண்டில் யாழ்ஓசை இணையம்...தொடரட்டும் நம் உறவு !

14வது ஆண்டில் யாழ்ஓசை இணையம்...தொடரட்டும் நம் உறவு !

அன்புறவுகளுக்கு வணக்கம் !

ஒரு புதிய புத்தகத்தை அதன் வாசனையை நுகர்ந்து தடவி, அட்டை போட்டு, அழகு பார்க்கும் சிறு பிள்ளையாகவே இன்றும் யாழ்ஓசை உடனான எமது பந்தம்.

புதியவைகளை மற்றவர்களுக்கு அறியத் தரவேண்டுமாயின் அவை குறித்து நாம் அறிந்து கொள்ள வேண்டும் எனும் ஞானத்தினை எப்போதும் எமக்கு நல்கும் போதி மரம் இது. சலசலப்புக்கள் ஏதுமின்றி மெத்தனமாய் தொடரும் இந்தப் பயணத்தில் பதின்மூன்று ஆண்டுகள் உருண்டோடிவிட்டன என்பது ஆச்சரியத்துடன் கூடிய அழகான சுகானுபவம்.

தொடரும் இப்பயணத்தில் இணைந்திருக்கும் அன்புறவுகளே!, தொடர்ந்தும் இணைந்திருங்கள் விரைவில் கூடிக் கொண்டாடி மகிழ்வோம் !

-யாழ்ஓசை குழுமம்,