அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார் ஏ.ஆர்.ரஹ்மான்

அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார் ஏ.ஆர்.ரஹ்மான்

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நெஞ்சுவலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னையில் உள்ள அப்பல்லோ வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார் ஏ.ஆர்.ரஹ்மான் | A R Rahman Admitted To The Emergency Room58 வயதான அவர் தற்போது வைத்தியர்களின் குழுவின் தீவிர கண்காணிப்பில் உள்ளார். ஏ.ஆர்.ரகுமான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் அறிந்து ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஏ.ஆர்.ரஹ்மானை விட்டு பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு தெரிவித்ததை தொடர்ந்து பல சர்ச்சைகள் ஏற்பட்டது. இதை அடுத்து உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரஹ்மானை விட்டு பிரிவதாக சாய்ரா பானு தெரிவித்திருந்தார்.