சமையல் எரிவாயு தட்டுப்பாடு; வெடிக்கவுள்ள போராட்டம்!

சமையல் எரிவாயு தட்டுப்பாடு; வெடிக்கவுள்ள போராட்டம்!

 நாட்டில் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டுக்கு தீர்வு காணக் கோரி, எரிவாயு நிறுவனத்துக்கு முன்னால் இன்று தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத் தலைமையில் போராட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன்கள் விநியோகத்தில் எந்த குறைபாடும் இல்லை என அரசாங்கம் கூறியுள்ளது.

சமையல் எரிவாயு தட்டுப்பாடு; வெடிக்கவுள்ள போராட்டம்! | Cooking Gas Shortage Protests Colombo

அத்துடன் சுமார் 80,000 கொள்கலன்கள் சந்தைக்கு விடப்பட்டுள்ளதாகவும் வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

எரிவாயு தேவையுடைய பெரும்பாலான பகுதிகளில் லிட்ரோ நிறுவனமும், மீதமுள்ள பகுதிகளில் லாஃப் நிறுவனமும் பூர்த்தி செய்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.