மாணவர்களுக்கான இன்டர்ன்ஷிப் வாய்ப்புகளை மேம்படுத்த ESOFT Uni- Jaffna உடன் Lanka Job இணைவு

மாணவர்களுக்கான இன்டர்ன்ஷிப் வாய்ப்புகளை மேம்படுத்த ESOFT Uni- Jaffna உடன் Lanka Job இணைவு

இலங்கையின் முன்னணி ஆட்சேர்ப்பு தொழில்நுட்ப நிறுவனமான Lanka Job (PVT) Ltd தனது 5 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு உயர்கல்வி மற்றும்  வேலைவாய்ப்புகளுக்கிடையிலான தொடர்பை வலுப்படுத்தும் நோக்கில், ESOFT Uni (ESU) யாழ்ப்பாண கிளையுடன் இணைந்து  தொழில்வாய்ப்பு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாட்டுள்ளது. இந்த தொழில்வாய்ப்பு கூட்டாண்மை தற்போது  கல்வி பயிலும் மாணவர்களுக்கும் மற்றும் ஏற்கனவே கல்வியினை முடித்து வேலைவாய்ப்பிற்கு  காத்திருக்கும் மாணவர்களுக்கும் தொழில் தேவைகளுக்கு ஏற்ப அமைக்கப்பட்ட இன்டர்ன்ஷிப் (Internship job opportunities) வாய்ப்புகளை வழங்குவதை இலக்காகக் கொண்டுள்ளது.

இந்த தொழில் கூட்டாண்மை புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) மூலம் அதிகாரப்பூர்வமாக்கப்பட்டுள்ளது. முக்கிய தொழில் துறைகளில் உள்ள இன்டர்ன்ஷிப் மற்றும் பயிற்சி நிலை வேலைவாய்ப்புகளுக்கு மாணவர்களுக்கு நேரடி வாய்ப்புக்களை வழங்குவதன் மூலம், பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு தகுதியை மேம்படுத்துவதே இதன் பொதுவான நோக்கமாகும்.

மாணவர்கள் www.lankajob.lk என்ற இணைய முகவரியில் தங்கள் வேலை வாய்புக்களை பார்வையிடவும் வேலைவாய்ப்புக்களுக்கு விண்ணப்பிக்கவும் முடியும்