ஆபாசத் தளங்களுக்கு விழுந்த பாரிய அடி ; சிறுவர்களைப் பாதுகாக்க அதிரடி நடவடிக்கை

ஆபாசத் தளங்களுக்கு விழுந்த பாரிய அடி ; சிறுவர்களைப் பாதுகாக்க அதிரடி நடவடிக்கை

இணையதளங்களில் முறையான வயது சரிபார்ப்பு முறைகளை நடைமுறைப்படுத்தத் தவறியதற்காக, '8579 LLC' என்ற ஆபாச நிறுவனத்திற்குப் பிரித்தானிய ஊடக ஒழுங்குமுறை நிறுவனமான ஓஃப்கொம் (Ofcom) 1.35 மில்லியன் பவுண்டுகளை அபராதமாக விதித்துள்ளது.

2025 ஜூலை மாதம் நடைமுறைக்கு வந்த இணையப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், 18 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் ஆபாச உள்ளடக்கங்களைப் பார்ப்பதைத் தடுக்க "மிகவும் பயனுள்ள" வயது சரிபார்ப்பு முறைகளை 8579 LLC நிறுவனம் கொண்டிருக்கவில்லை என ஓஃப்கொம் தெரிவித்துள்ளது.

ஓஃப்கொம் கோரிய தகவல்களை வழங்கத் தவறியதற்காக அந்நிறுவனத்திற்கு மேலதிகமாக 50,000 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஆபாசத் தளங்களுக்கு விழுந்த பாரிய அடி ; சிறுவர்களைப் பாதுகாக்க அதிரடி நடவடிக்கை | Massive Blow Porn Sites Action Protect Children

இந்தநிலையில் எஞ்சியுள்ள ஒரு இணையதளத்தில் திங்கட்கிழமை மாலை 5 மணிக்குள் முறையான வயது சரிபார்ப்பை நடைமுறைப்படுத்தத் தவறினால், தினசரி 1,000 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அனைத்து இணையதளங்களின் பட்டியலை வழங்கத் தவறினால் தினசரி 250 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்படும்.

சிறுவர்களை ஆபாசக் காட்சிகளிலிருந்து பாதுகாக்க வலுவான வயது சரிபார்ப்பு முறைகள் அவசியம் என்றும், சட்டத்தை மீறுபவர்கள் கடும் அபராதங்களை எதிர்கொள்ள நேரிடும் என்றும் ஓஃப்கொமின் அமுலாக்கத்துறை இயக்குனர் ஜோர்ஜ் லஸ்டி தெரிவித்துள்ளார்.

முன்னதாக டிசம்பர் மாதம் 'AVS Group Ltd' என்ற நிறுவனத்திற்கு 1 மில்லியன் பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டது.

இதற்கிடையில், இந்த சட்டத்தைக் காரணம் காட்டி பெப்ரவரி 2 ஆம் திகதி முதல் மற்றுமொரு ஆபாச தளம் ஐக்கிய இராச்சியத்தில் தனது சேவைகளைக் கட்டுப்படுத்தத் தொடங்கியுள்ளது.