
யாழ்ஓசை இணையத்திலும், உங்கள் இதயங்களிலும் இணைந்தது 15 ஆண்டுகள் கழிந்து தொடரும் பயணம் இது.
அன்பிற்கினிய உறவுகளே !
இயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்தது யாழ்ஓசை இணையம்.
யாழ்ஓசை இணையத்திலும், உங்கள் இதயங்களிலும் இணைந்தது 15 ஆண்டுகள் கழிந்து தொடரும் பயணம் இது.
கணினித் தமிழோடு, புதிய நுட்பங்களை உள்ளிணைத்து, உலகத் தமிழர்கள் ஒன்று கூடி, தினமும் புதிதாய் திகழும் உலகை, உவகைத் தமிழில் கண்டு, மகிழ்ந்திட உதித்திருக்கும் யாழ்ஓசை இணையம், உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்கள் பலரின் நேசிப்பிற்குரியதாய் இருப்பதில் அகம் மகிழ்கின்றோம்.
2009ம் ஆண்டிலிருந்து இணையத்தில் வலம் வரும் யாழ்ஓசை இணைய குழுமம் உங்கள் அனைவரினதும் ஒன்றினைவில் உருவானது. ஊடகநெறிமுறைத் தார்மீகத்துடன், தமிழ்கூறு நல்லுலகில் தனித்துவமாய் சேவையாற்றி வரும் யாழ்ஓசை இணைய குழுமத்தினராகிய நாம், செயல்விருப்பு மிக்க அனைவரையும், இணைந்து பயணிக்க விரும்பி அழைத்தவாறு தொடர்ந்து செல்கின்றோம்...
அங்கீகாரத்தைத் தேடி அலையும் எழுத்துலகத்தை ஒப்பிடும்போது எம் அடுத்தப் பணி என்ன? என்று திட்டமிட்டு ஓடிக்கொண்டே இருக்கிறது இக் குழுமம். காரணம் முடிந்தவரை விதைகளை விதைத்து விடுவோம். நிழலோ, கனியோ எவருக்கோ கிடைக்கும் அல்லவா?. இந்த எண்ணத்தை என்னுள்ளும் உருவாக்கிய யாழ்ஓசை எனக்கு தகப்பன் சாமியே.
வரம் தந்த சாமிக்கு என் இனிய வாழ்த்துகள்.
புதியவை காண...இணைந்திருங்கள்.
Tamil News : www.yarlosai.com
English News : www.yarlosai.lk
Cinema News : www.cinenxt.com
Lifestyle News : www.trendlylife.com
News: www.newstamizha.com
#yarlosai யயாழ் ஓசை #news1st #16th_anniversary