கணவன் இறந்த சோகத்தில் வயிற்றை கிழித்த கர்ப்பிணி பெண்; அதிர்ச்சியில் உறவினர்கள்
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் பஹ்ரைச் (Bahraich) பகுதியைச் சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், கர்ப்பிணியாக இருந்த நிலையில், பிரசவ வலி ஏற்பட்டபோது வீட்டில் இருந்த கத்தியா தனது வயிற்றை கிழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண்ணின் கணவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், ஆதரவின்றித் தனியாக வசித்து வந்த அந்தப் பெண் கடும் மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அவருக்குப் பிரசவ வலி ஏற்பட்டபோது, கணவன் இல்லாத விரக்தியில் சமையலறை கத்தியை எடுத்துத் தனது வயிற்றைத் தக்னே கிழித்துக்கொண்டார்.
அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், ரத்த வெள்ளத்தில் கிடந்த அந்தப் பெண்ணை மீட்டு உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்தத் துயரமான நிலையிலும், அவருக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். எனினும், கத்தியால் ஆழமாகத் தனது வயிற்றைக் கிழித்துக்கொண்டதால் அந்தப் பெண்ணுக்கு அதிகப்படியான ரத்தப்போக்கு ஏற்பட்டது.
அதிக ரத்த இழப்பு காரணமாக அந்தப் பெண்ணின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால், அவர் மேல் சிகிச்சைக்காக மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தற்போது மருத்துவர்கள் அவருக்குத் தீவிர கண்காணிப்புப் பிரிவில் வைத்துச் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
"பிரசவ வலியின் போது துணையாக இருக்க வேண்டிய கணவன் இல்லாத சோகமும், வறுமையும் அவரை இந்த விபரீத முடிவுக்குத் தள்ளியிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது