மட்டக்களப்பில் கையடக்க தொலைபேசி மூலம் கொள்ளை: பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை..!
மட்டக்களப்பில் தொலைபேசி பணப்பரிமாற்றம் மூலம் 22 ஆயிரம் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று (07.03.2024) இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு நகரில் பேக்கரி ஒன்றினை நடாத்திவரும் வர்த்தகர் ஒருவரின் புகைப்படத்தை, கையடக்க தொலைபேசி இலக்கம் ஒன்றில் மோசடிகும்பல் பதிவிட்டு குறித்த கொள்ளையில் ஈடுப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து பேக்கரி உரிமையாளர் என அடையாளப்படுத்திக்கொண்ட குறித்த கும்பல் அந்த இலக்கத்தின் ஊடாக அவருடைய நண்பர்களை தொடர்புகொண்டு தான் வைத்தியசாலையயில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், உடன் பணம் அனுப்புமாறு கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன்போது அவரின் புகைப்படம் பதிவிட்ட போலி இலக்கத்திற்கு 22 ஆயிரம் ரூபாவை நண்பர்கள் அனுப்பியுள்ளார்.
இதன் பின்னர் போலி கையடக்க தொலைபேசி இலக்கம் மூலம் மோசடியாக பணம் கொள்ளையிட்டதை அறிந்து கொண்ட வர்த்தகர் மற்றும் அவரின் நண்பர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
அத்துடன் குறித்த மோசடி கும்பல் தொடர்பான விசாரணைகளை அப்பகுதி பொலிஸார் முன்னெடுத்துவருவதுடன் இவ்வாறான மோசடி கும்பல் செயற்பட்டு வருவதாகவும் அவர்களிடம் பொதுமக்கள் அனைவரும் அவதானமாக செயற்படுமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.