தோண்டத் தோண்டப் பணக்குவியல்! மிரண்டு போன பொலிஸார் - விசாரணையில் வெளியான தகவல்

தோண்டத் தோண்டப் பணக்குவியல்! மிரண்டு போன பொலிஸார் - விசாரணையில் வெளியான தகவல்

பாதுகாப்பான முறையில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் வீட்டுத் தோட்டம் ஒன்றிலிருந்து மூன்றரை கோடி ரூபாய் பணம் மீட்கப்பட்டுள்ளதாக குற்ற விசாரணை திணைக்களம் தெரிவித்துள்ளது .

இந்தச் சம்பவம் நேற்று முன்தினம்(27) குருணாகல் மகாவாவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

போதைப்பொருள் விற்பனையாளர்களிடம் பெற்றுக் கொள்ளப்பட்ட ஹெரோயின் தொகையை இரகசியமான முறையில் விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரி ஒருவரின் வீட்டுத் தோட்டத்தில் இருந்தே இந்த பணம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பணம் போதைப் பொருட்களை விற்பனையில் பெற்றுக் கொள்ளப்பட்டது என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய பொலிஸ் போதை பொருள் தடுப்பு பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் உட்பட ஐந்து அதிகாரிகள் குற்ற விசாரணை திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 7 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

துபாயில் உள்ள பிரதான தரப்பு போதை பொருள் விற்பனையாளரான கிஹான் பொன்சேகாவுக்கு சொந்தமான 100 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான 90 கிலோ கிராம் ஹேரோயினை இந்த பொலிஸார் திருடி விற்பனை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த புதைக்கப்படடிருந்த பணம் தொடர்பில் குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்