சாட்சியமளிப்பதை தொலைபேசியில் பதிவு செய்த பெண்ணுக்கு அபராதம்! தொலைபேசியும் பறிமுதல்

சாட்சியமளிப்பதை தொலைபேசியில் பதிவு செய்த பெண்ணுக்கு அபராதம்! தொலைபேசியும் பறிமுதல்

கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தில், தனது தந்தை சாட்சியமளிப்பதை கையடக்க தொலைபேசியில் காணொளியாக பதிவு செய்த பெண் ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் பணியில் இருந்த பொலிஸ் அதிகாரியொருவர் இதை அவதானித்த நிலையில் பெண்ணைக் கைது செய்து கையடக்க தொலைபேசியையும் பறிமுதல் செய்துள்ளார்.

சாட்சியமளிப்பதை தொலைபேசியில் பதிவு செய்த பெண்ணுக்கு அபராதம்! தொலைபேசியும் பறிமுதல் | Woman Fined For Recording Testimony On Phone

அறியாமையினால் இந்தத் தவறைச் செய்ததாக பெண் தரப்பில் தெரிவிக்கப்பட்டதுடன் குற்றத்தை ஒப்புக்கொண்ட குறித்த பெண்ணுக்கு, கொழும்பு தலைமை நீதவான் 1,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளார்.

அத்துடன் சம்பந்தப்பட்ட காணொளியை கையடக்க தொலைபேசியிலிருந்து நீக்குமாறு உத்தரவிட்ட நீதவான், வருங்காலத்தில் இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளார்.