
இரத்த வெள்ளத்தில் கிடந்த ஆசிரியை! தீவிர விசாரணையில் பொலிஸார்
அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள தம்பிலுவில் ஆதவன் வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
தனிமையில் இருந்த ஆசிரியர் ஒருவரின் தலையில் தாக்கிவிட்டு அவரின் தங்க நகயை கொள்ளை அடித்து சென்றுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குறித்த ஆசிரியர் திங்கட்கிழமை மாலையில் வீட்டில் தனிமையில் இருந்துள்ளர். அதன் போதே இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் மாலை 6 மணி அளவில் வீடு திரும்பிய கணவர், மனைவி தலையில் காயம் ஏற்பட்டு இரத்த வெள்ளத்தில் மயங்கிய நிலையில் கீழே வீழ்ந்து கிடப்பதைக்கண்டு அவரை உடனடியாக திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் குறித்த ஆசிரியரை தாக்கிவிட்டு அவரின் குழுத்தில் இருந்த தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளனர்.