அஸ்வெசும பெறும் பயனாளிகள் தொடர்பில் வெளியான தகவல்

அஸ்வெசும பெறும் பயனாளிகள் தொடர்பில் வெளியான தகவல்

அஸ்வெசும திட்டத்தில் தங்களது தகவல்களைச் சரியான நேரத்தில் புதுப்பிக்கத் தவறியதால் அந்த நன்மைகளை இழக்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த விடத்தை நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் நிமால் கொடவலகெதர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அஸ்வெசும திட்டத்தின் கீழ் ஒரு பயனாளி தெரிவு செய்யப்பட்டால், அவர் 12 மாத காலத்துக்கு தடையின்றி கொடுப்பனவுகளைப் பெறுவார்.

அதன் பின்னர், அந்தப் பயனாளி அடுத்த 12 மாத சுழற்சிக்கும் தகுதியானவரா என்பதைத் தீர்மானிக்க வருடாந்த மீளாய்வு செய்யப்படுவது கட்டாயமாகும்.

அஸ்வெசும பெறும் பயனாளிகள் தொடர்பில் வெளியான தகவல் | Aswesuma Welfare Scheme Monthly Allowance Payment

இந்த மீளாய்வுக்காகத் தகவல்களைப் புதுப்பிக்கும் பணி 2025 நவம்பர் 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. எவ்வாறிருப்பினும் சுமார் 85,000 பயனாளிகள் இதுவரை தங்களது தகவல்களைப் புதுப்பிக்கவில்லை.

அந்த வகையில் வருடாந்த மீளாய்வுக்காகத் தங்களது தகவல்களைச் சரியான நேரத்தில் புதுப்பிக்கத் தவறியதன் காரணமாக, 'அஸ்வெசும' நலன்புரித் திட்டத்தின் கீழ் ஏழை மற்றும் மிக ஏழை என வகைப்படுத்தப்பட்ட 85,000க்கும் மேற்பட்ட நபர்கள் தங்களது நன்மைகளை இழக்கும் நிலையில் உள்ளனர்.

அஸ்வெசும பயனாளிகளின் தகவல்களைப் புதுப்பிக்கும் செயல்முறை 2025 நவம்பர் 20 அன்று ஆரம்பிக்கப்பட்டது. இருப்பினும், இதுவரை ஏழை பிரிவைச் சேர்ந்த 56,547 பயனாளிகளும், மிக ஏழை பிரிவைச் சேர்ந்த 28,608 பயனாளிகளும் இச்செயல்முறையைப் பூர்த்தி செய்யத் தவறியுள்ளனர்.

இதற்கான புதிய காலக்கெடு கடந்த 20ஆம் திகதி வரை மீள புதுபிக்கப்பட்டிருந்தது.