Published On: Wed, Aug 15th, 2012

ஐ லவ் யூ சொன்ன உதடுகள் வெறுப்பு உமிழும் போது..!!

Share This
Tags

திருமணத்திற்கு முன்பு காதலித்துவிட்டு திருமணத்திற்கு பின் வேலை, படிப்பு என பிசியாகிவிடுவாதாலேயே பல்வேறு காதல் திருமணங்கள் தோற்றுப் போகின்றன. ஆயிரம் முறை ஐ லவ் யூ சொன்ன உதடுகள் வெறுப்பு உமிழும் போது மனதெல்லாம் ரணமாகிப் போகும். இதன் காரணமாகவே திருமண வாழ்க்கையே திசை மாறிப் போக வாய்ப்புள்ளது. எனவே திருமணத்திற்குப் பின்னரும் தம்பதியரிடையே காதல் இருந்தால் மட்டுமே மண வாழ்க்கை மகிழ்ச்சிகரமனதாக இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள். மணவாழ்க்கையில் வசந்தம் வீச அவர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன்.
திருமணத்திற்கு முன்பு அடிக்கடி கூறும் ஐ லவ் யூ” என்ற வார்த்தை திருமணத்திற்குப் பின்னர் காணாமல் போய்விடக்கூடாது. வார்த்தையால் கூறுவதை விட உண்மையான அன்பை செயல்கள் மூலம் புரியவைக்க வேண்டும். உங்களின் அன்பை முழுமையாக உணர வைக்கவும் முயற்சிக்கவேண்டும்.
கணவரிடம் ஆயிரம் முறை “ஐ லவ் யூ” சொல்லுவதை விட அதிகாலையில் கொடுக்கும் முத்தம் அன்பை உணர்த்திவிடும். ஆழமான பார்வை. அன்பான ஸ்பரிசம் என உங்களின் காதலை அவ்வப்போது உணர்த்துங்கள். அன்பான தொடுகையினால் உங்களின் இதயத்தை புரியவைக்கலாம்.
காலையில் குளித்து, சட்டை போடும் போது நீங்கள் சென்று அந்த பட்டனை போடலாம். இதனால் ரொமான்ஸ் அதிகரிக்கும். சாப்பிட வரும் போது அவர்களுக்கு பிடித்த உணவை செய்து வைத்து அவர்களை மகிழ்விப்பதன் மூலம் அன்பை வெளிப்படுத்தலாம். மேலும் அலுவலகம் செல்லும் போது பையை எடுத்துக் கொடுக்கும் சாக்கில் சின்னதாய் முத்தமிட்டு அனுப்பலாம். அவர்களுக்கு மதிய உணவு கொடுத்து அனுப்பும் டிபன் பாக்சில், காகிதத்தில் இதயம் வரைந்து அதில் ஐ.லவ்.யூ எழுதி அனுப்பலாம்.
கணவர் வேலைக்கோ, வெளியூருக்கோ சென்றிருந்தால், ஒரு நாளைக்கு இரு முறை போன் செய்து விசாரித்து கொண்டிருப்பதன் மூலம் நீங்கள் அவர்களையே நினைத்துக் கொண்டிருப்பதாக உணர்த்தலாம். மேலும் அப்படி பேசும் போது நீங்கள் எந்த அளவிற்கு அவரை மிஸ் செய்கிறீர்கள் என்பதை கொஞ்சலாக தெரிவியுங்கள். அதற்காக அடிக்கடி போன் செய்து அவர்களை கோபப்படுத்தி விடாதீர்கள்.
மனதிற்குப் பிடித்த உணவு டென்சனை குறைக்கும் எனவே அலுவலகப் பணியினால் டென்சனாக வரும் போது, அவர்களை மகிழ்விக்கும் வகையில் அவர்களுக்கு மிகவும் பிடித்தமான டிஷ் செய்து தரலாம். வரும்போதே ஏதாவது குறை சொல்லி டென்சனை அதிகரிக்காமல் அன்பான செயல்களால் அரவணைப்பாய் செயல்பட்டு டென்சனை குறைக்கலாம். இவ்வாறு செய்வதன் மூலம் உங்களவரின் டென்சன் ஓடியே போய்விடும். அப்புறம் என் உன் விழி கண்டு நான் என்னை மறந்தேன் என்று கவிதை பாட ஆரம்பித்துவிடுவார்.
இரவு நேரத்தில் ரொமான்ஸ் மூடினை அதிகரிக்க கிச்சனில் பழங்களால், அதுவும் அவர்களுக்கு பிடித்த பழங்களால் “ஐ லவ் யூ” என்று அடுக்கி வைத்துவிடுங்கள். பின் அவர்களை கூப்பிட்டு கிச்சனில் இருந்து ஏதேனும் எடுத்து வரச் சொல்லி அனுப்பி, அவர்கள் பார்க்குமாறு செய்து பாருங்கள், அப்போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது.
இருவரும் முதலில் பார்த்த அந்த நாளை நினைவில் வைத்து, அந்த நாளன்று அவர்களை முதலில் பார்த்த போது என்னென்ன சாப்பிட்டீர்களோ அதை சமைத்து அவர்களுக்கு அந்த நாளை நினைவுபடுத்தலாம். இல்லாவிட்டால் அந்நாளன்று இருவரும் சேர்ந்து எங்கு சென்றீர்களோ அந்த இடத்திற்கு அழைத்து சென்று நினைவு கூறலாம். இது போன்ற செயல்களால் குடும்ப வாழ்வில் விரிசல் ஏற்பட வழியே இல்லை என்கின்றனர் நிபுணர்கள்.

Leave a comment

XHTML: You can use these html tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

கருத்துக் கணிப்பு

செக்ஸ் இல்லாத காதல் சாத்தியமா?

View Results

Loading ... Loading ...