குரு பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களுக்கு இனி அதிர்ஷ்டம்தான்!

குரு பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களுக்கு இனி அதிர்ஷ்டம்தான்!

கடக ராசிக்காரர்களே கடந்த ஓராண்டு காலமாக உங்களுடைய ராசிக்கு 10-ம் வீட்டில் அமர்ந்து உங்களுக்கு பல விதங்களிலும் அவமானங்களையும், தோல்வியையும் கொடுத்த குருபகவான் இப்போது 01.05.2024 முதல் 13.04.2025 வரை லாப வீட்டில் நுழைகிறார்.

உங்கள் ஆழ்மனதில் இருக்கும் தாழ்வு மனப்பான்மை நீங்கும். பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேருவீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். பிள்ளை பாக்கியமும் கிடைக்கும்.

குரு பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களுக்கு இனி அதிர்ஷ்டம்தான்! | Guru Peyarchi 2024 Lucky For Cancerians Spiritual

நெடுநாள் ஆசையான வீடு, மனை வாங்குவது, வீடு கட்டுவது போன்ற முயற்சிகளும் பலிதமாகும். புது வேலைக்கு முயற்சி செய்த இடத்தில் இருந்து நல்ல பதில் வரும். அயல்நாட்டில் வேலை கிடைக்கவும் வாய்ப்பிருக்கிறது.

சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். பார்த்தும் பார்க்காமல் சென்றுக் கொண்டிருந்த சொந்த - பந்தங்க ளெல்லாம் வலிய வந்துப் பேசு வார்கள். முன்கோபம் குறையும்.

எதிர்பார்த்திருந்த பணம் கைக்கு வரும். புதுத் தொழில் தொடங்குவீர்கள். கணவர் மனம் விட்டுப் பேசுவார். கணவர்வழி உறவினர்களும் மதிப்பார்கள். மாமனாரின் உடல் நிலை சீராகும்.

குரு உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டை பார்ப்பதால் நகை வாங்குவீர்கள். இளைய சகோதரருக்கு திருமணம் முடியும். தைரியம் பிறக்கும்.  

குரு பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களுக்கு இனி அதிர்ஷ்டம்தான்! | Guru Peyarchi 2024 Lucky For Cancerians Spiritual

குரு 5-ம் வீட்டை பார்ப்பதால் குழந்தை பாக்கியம் உண்டு. பூர்வீக சொத்துப் பிரச்சினை தீரும். வழக்கு சாதகமாகும். குரு 7-ம் வீட்டை பார்ப்பதால் பிரபலமாவீர்கள்.

அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். மகன் மற்றும் மகளின் கல்யாண முயற்சிகள் பலிதமாகும். உங்களிடமிருந்த கற்பனைத் திறன், கலைத் திறனை வெளிப்படுத்தவும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும்.

குருபகவானின் நட்சத்திர பயணம்:

எதிர்வரும் 1.5.2024 முதல் 13.6.2024 வரை உங்களின் தனாதிபதியான சூரியனின் கார்த்திகை நட்சத்திரத்தில் குரு பயணிப்பதால் திடீர் பணவரவு உண்டு. சமாளிக்க முடியாத பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.

வழக்கில் வெற்றியுண்டு. கண் வலி குறையும். தந்தை வலி உறவினர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். சிலருக்கு அரசு வேலை கிடைக்கும்.

குரு பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களுக்கு இனி அதிர்ஷ்டம்தான்! | Guru Peyarchi 2024 Lucky For Cancerians Spiritual

எதிர்வரும் 13.6.2024 முதல் 19.8.2024 வரை மற்றும் 28.11.2024 முதல் 10.4.2025 வரை உங்கள் ராசிநாதனான சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் குரு செல்வதால் பிரபலமடைவீர்கள்.

20.8.2024 முதல் 27.11.2024 வரை மற்றும் 10.4.2025 முதல் 13.4.2025 வரை செவ்வாயின் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் நினைத்த காரியங்களை முடிப்பீர்கள்.