பாலசந்திர சங்கடஹர சதுர்த்தி ; விநாயகரை இப்படி வழிபடுங்கள் எப்படிப்பட்ட துன்பமும் விலகும்
வளர்பிறை மற்றும் தேய்பிறை என மாதத்தில் இரண்டு சதுர்த்திகள் வரும். இதில் தேய்பிறையில் வரும் சதுர்த்தியை சங்கடஹர சதுர்த்தி என்கிறோம்.
ஒவ்வொரு மாதத்திலும் வரும் சங்கடஹர சதுர்த்திக்கு ஒவ்வொரு பெயரும், தனியான கதையும் உள்ளது. அப்படி பங்குனி மாதத்தில் வரும் சங்கடஹர சதுர்த்திக்கு பாலசந்திர சங்கடஹர சதுர்த்தி என்று பெயர். இது மிகவும் முக்கியமான சங்கடஹர சதுர்த்தியாகும்.
இந்த ஆண்டு பாலசந்திர சங்கடஹர சதுர்த்தி மார்ச் 28ம் தேதி வருகிறது. மார்ச் 28ம் தேதி மாலை 05.45 மணிக்கு துவங்கி, மார்ச் 29ம் தேதி மாலை 06.21 வரை சதுர்த்தி திதி உள்ளது.
விநாயகப் பெருமான் துக்கங்களை போக்கக் கூடியவர். இதனால் இவருக்குரிய சங்கடஹர சதுர்த்தி நாளில் விரதம் இருந்து வழிபட்டால் எப்படிப்பட்ட துன்பமாக இருந்தாலும் அதனை விநாயகப் பெருமான் நீக்கிடுவார் என்பது ஐதீகம்.
* பாலசந்திர சங்கடஹர சதுர்த்தகி நாளில் விரதம் இருப்பவர்கள் அதிகாலையிலேயே எழுந்து புனித நீராடி, வீட்டையும், பூஜை செய்யும் இடத்தையும் சுத்தம் செய்ய வேண்டும்.
*மரப்பலகையின் மீது விநாயகரின் படம் அல்லது சிலை வைத்து அதற்கு மஞ்சள் மலர்களால் அலங்கரித்து, நெய் விளக்க ஏற்ற வேண்டும்.
* அருகம்புல் சாற்றி, அர்ச்சித்து, வீட்டில் செய்த மோதகம், லட்டு, பஞ்சாமிர்தம், பாயசம் உள்ளிட்டவற்றை படைத்து வழிபட வேண்டும்.
* ஓம் பாலசந்திராய நமஹ என்ற மந்திரத்தை 108 முறை சொல்லி வழிபட வேண்டும்.
* வாழ்க்கையில் இருக்கும் அனைத்து விதமான துன்பங்களையும் நீக்க வேண்டும் என விநாயகப் பெருமானிடம் முறையிட வேண்டும்.
கிடைக்கும் பலன்
பாலசந்திர சங்கடஹர சதுர்த்தி அன்று காலை துவங்கி, மாலை வரை விநாயகருக்கு விரதம் இருந்து வழிபட்டால் எப்படிப்பட்ட தடைகளும் நீங்கி, விநாயகரின் அருள் முழுவதுமாக கிடைக்கும்.
வாழ்வில் பலவிதமான துன்பங்களை சந்தித்து, அதில் இருந்த வெளிவர முடியாமல் தவிர்ப்பவர்கள் இந்த நாளில் விரதம் இருப்பதால் எப்படிப்பட்ட துன்பமாக இருந்தாலும் விலகி விடும்.
மிக விரைவாக துன்பங்களை போக்கி செல்வ வளத்தையும், அதிர்ஷ்டத்தையும் தரக் கூடிய நாள் பாலசந்திர சங்கடஹர சதுர்த்தி நாளாகும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறுவதற்கும் இந்த நாளில் விரதம் இருக்கலாம்.