நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் கைது

நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் கைது

நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் அசேல சம்பத் குற்றவியல் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனை காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அஸ்ட்ரா செனகா தடுப்பூசி தொடர்பில் தவறான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பரப்பிய குற்றச்சாட்டின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் பொது கண்காணிப்பாளரால் அளிக்கப்பட்ட முறைப்பாட்டையடுத்தே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். 
இதனையடுத்து இன்று(26) அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.