சண்டை கொஞ்சம் பெருசா இருக்கும் போல! பாட்டியுடன் மல்லுக்கட்டும் குட்டி தேவதை....

சண்டை கொஞ்சம் பெருசா இருக்கும் போல! பாட்டியுடன் மல்லுக்கட்டும் குட்டி தேவதை....

பாட்டிக்கும், பேத்திக்கும் நடக்கும் சண்டை தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

குழந்தைகளின் உலகமே குதூகலமானது. குழந்தைகளின் அழுகை, சிரிப்பு என பல்வேறு கோணங்களையும் ரசித்து கொண்டே இருக்கலாம்.

இங்கே ஒரு குழந்தை செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஒரு குட்டிக்குழந்தை தன் செல்லப் பாட்டியுடன் செம க்யூட்டாக சண்டை போடுகிறது. தன் மழலை மொழி மாறாமல் அந்தக் குழந்தை பாட்டியுடன் சண்டை செய்ய, பாட்டியும் பதிலுக்கு செல்லக்குழந்தையோடு விளையாடும் நோக்கத்தில் சண்டை செய்கிறது.

கடைசியில், குட்டிக்குழந்தை ஒருகட்டத்தில் கோபமாகி, பாட்டியின் கண்ணைக் குத்திவிட்டது. இந்த குட்டிக்குழந்தையின் க்யூட்டான கோபம், இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.