நடிகர் டேனியல் பாலாஜி காலமானார்

நடிகர் டேனியல் பாலாஜி காலமானார்

பிரபல திரைப்பட நடிகர் டேனியல் பாலாஜி உயிரிழந்துள்ளார்.

மாரடைப்பு காரணமாக கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

48 வயதான டேனியல் பாலாஜி காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பைரவா, பொல்லாதவன் உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.