ஒலிம்பிக் போட்டிற்கு தகுதி பெற்றுள்ள இலங்கையின் இளம் வீரர்
இலங்கையின் இளம் பெட்மிட்டன் வீரர் ஒருவர் பாரிஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளதாக விளளயாட்டுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
20 வயதான விரான் நெட்டசிங்க என்ற இளம் வீரரே இவ்வாறு ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.
எதிர்வரும் ஜூலை மாதம் 26ம் திகதி பிரான்ஸில் பாரிஸ் நகரில் ஒலிம்பிக் போட்டித் தொடர் ஆரம்பமாக உள்ளது.
ஒலிம்பிக் போட்டித் தொடரில் பங்கேற்பதற்கு நேரடியாக தகுதியை பெற்றுக்கொண்ட மிக இள வயது வீரர்களில் ஒருவராக ஹிரான் தெரிவாகியுள்ளார்.