மீண்டும் ஐபிஎல் தொடரில் சாதனை படைத்த சன்ரைசர்ஸ்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி வெற்றி பெற 267 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 266 ரன்கள் குவித்தது.
ஐபிஎல் வரலாற்றில் ஓர் அணி எடுத்த 4-ஆவது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும் என்பது கவனிக்கத்தக்கது. இதையடுத்து 267 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி டெல்லி அணியின் பேட்ஸ்மேன்கள் களமிறங்கியுள்ளனர்.
இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் ஹைதராபாத் அணியிலிருந்து களமிறங்கினர். 12 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட அபிஷேக் சர்மா 6 சிக்ஸர் 2 பவுண்டரியுடன் 46 ரன்களும், 32 பந்துகளை எதிர் கொண்ட டிராவிஸ் ஹெட் 6 சிக்ஸர் 11 பவுண்டரியுடன் 89 ரன்களும் குவித்தனர்.
பவர் பிளே ஓவரில் சன்ரைசர்ஸ் அணி விக்கெட் இழப்பின்றி 125 ரன்கள் குவித்தது. இது டி20 வரலாற்றில் எந்த ஒரு அணியும் நிகழ்த்தாத ஓர் சாதனையாக அமைந்தது. தொடர்ந்து விளையாடிய ஹைதராபாத் அணியில் நிதிஷ் ரெட்டி 37 ரன்கள் எடுத்தார்.
விக்கெட்டுகள் ஒரு பக்கம் விழுந்தாலும் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷபாஷ் அகமது 29 பந்துகளில் 5 சிக்சர் 2 பவுண்டரியுடன் 59 ரன்கள் குவித்தார். 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 266 ரன்கள் குவித்தது.
அதையடுத்து 267 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி டெல்லி கேபிடல்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் களத்தில் இறங்கி உள்ளனர். ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் எடுக்கப்பட்ட நான்காவது அதிகபட்ச ஸ்கோராக சன்ரைசர்ஸ் அணியின், 266 ரன்கள் அமைந்தது.