Breaking News
Home / இலங்கை

இலங்கை

சுனில் ரத்னாயக்கவிற்கு பொது மன்னிப்பு – சர்வதேச மன்னிப்பு சபை கண்டனம்!

சுனில் ரத்னாயக்கவிற்கு பொது மன்னிப்பு வழங்கியுள்ள ஜனாதிபதியின் செயலுக்கு சர்வதேச மன்னிப்பு சபை கண்டனம் தெரிவித்துள்ளது. சர்வதேச மன்னிப்பு சபையின் தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் பிராஜ் பட்நாயக் இவ்வாறு கண்டனம் வெளியிட்டுள்ளார். முன்னாள் இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்னாயக்கவிற்கு பொது மன்னிப்பு வழங்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எடுத்த தீர்மானம், சமூகத்திற்கு கவலையளிக்கும் செய்தி எனவும் அவர் கூறியுள்ளார். இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பிலான பொறுப்புகூறல் மிகவும் குறைந்தளவிலேயே உள்ளதாகவும் …

Read More »

அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கை மீறிய 5185 பேர் அதிரடியாக கைது!

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காலப்பகுதியில் அதனை மீறி பாதைகள், குறுக்கு வீதிகளில் நடமாடுவோர், ஒன்று கூடுவோர் என 5,185 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊரடங்கு காலத்தின் போது வழங்கப்பட்ட சில சலுகைகளை பொதுமக்கள் துஷ்பிரயோகம் செய்ததை அடுத்து அரச ஒசுசல தவிர்ந்த மருந்தகங்கள், ஏனைய அனைத்து விதமான வர்த்தக நிலையங்களையும் மூட உத்தரவிட்டதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நாள் …

Read More »

தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும்- சிறிகாந்தா

யுத்தத்துடன் தொடர்புபட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இராணுவத்தினர் மற்றும் அரசியல் கைதிகள் உள்ளிட்ட அனைவரும் விடுவிக்கப்பட வேண்டுமென தமிழ் மக்கள் தேசிய கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினரான எஸ்.சிறிகாந்தா தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக அறிக்கையில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “யாழ்ப்பாணம் மிருசுவில்லில் 2000ம் ஆண்டு எட்டு தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த முன்னாள் இராணுவசிப்பாய் கடந்த தினம் …

Read More »

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் எவருக்கும் கொரோனா இல்லை

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் எந்த ஒரு நபரும் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை தொடர்பில் இனங்காணப்படவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

Read More »

காவற்துறை ஊரடங்கு உத்தரவை மீறிய 1,167 பேர் கைது

காவற்துறை ஊரடங்கு உத்தரவை மீறிய 1,167 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதன்படி, இதுவரையில் 5,185 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. மேலும், 1,293 வாகனங்களையும் இதன்போது கைப்பற்றியுள்ளதாக குறித்த ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Read More »

ஊரடங்கின் போது முஸ்லிம் சமூகத்தில் மரணங்கள் சம்பவித்தால் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலத்தில் முஸ்லிம் சமூகத்தில் மரணங்கள் சம்பவித்தால் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை அறிக்கையொன்றின் மூலம் தௌிவுபடுத்தியுள்ளது. உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்க வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை அறிவித்துள்ளது. தற்போதைய காலகட்டத்தில் அதிகமானோர் ஒன்று கூட முடியாமையினால் வீடுகளில் இருந்தே துஆ செய்யுமாறும் உலமா சபை குறிப்பிட்டுள்ளது. ஜனாஸா …

Read More »

மக்கள் முறைப்பாடுகளை முன்வைக்க தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

மக்களின் முறைப்பாடுகளை பொறுப்பேற்பதற்காக ஜனாதிபதி செயலகத்தின் மக்கள் தொடர்பாடல் பிரிவை 24 மணித்தியாலங்களும் திறந்து வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் நிலைமையை கருத்திற்கொண்டு, ஜனாதிபதியின் ஆலோசனையின் பிரகாரம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் வழங்கும் உத்தரவுகளை நடைமுறைப்படுத்தாதிருத்தல் அல்லது மக்கள் அசௌகரியத்திற்குள்ளாகும் வகையில் செயற்படுகின்றமை உள்ளிட்ட முறைப்பாடுகளை இங்கு பதிவு செய்ய முடியும். 011-2354550 அல்லது 011-2354655 என்ற இலக்கங்களின் ஊடாக முறைப்பாடு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் …

Read More »

மருந்தகங்களில் ஏனைய பொருட்கள் விற்பனை – பொலிஸார் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை!

அரச மருந்தக கூட்டுத்தாபன விற்பனை நிலையங்களை தவிர ஏனைய ஒளடத விற்பனை நிலையங்களையும் சொகுசு வர்த்தக நிலையங்களையும் உடன் மூடுமாறு பொலிமா அதிபர் சீ.டி.விக்ரமரத்ன அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளார். பொலிஸ் தலைமையகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் தற்போது நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்களின் நலன்கருதி அனைத்து ஒளடத நிலையங்களையும் திறந்து வைப்பதற்கு அரசாங்கம் …

Read More »

மரக்கறிகளுக்கு உயர்ந்தபட்ச மொத்த விலை நிர்ணயம் – மீறினால் கைது!

மரக்கறிகளுக்கு உயர்ந்தபட்ச மொத்த விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய மரக்கறி மொத்த விற்பனை நிலையத்திற்கு வௌியே விற்பனை செய்யப்படும் போது, சில்லறை விலையாக ஒரு கிலோகிராமிற்கு 40 ரூபாய் மாத்திரமே மேலதிகமாக அறவிடப்பட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், கரட் 1 கிலோகிராமின் உச்சபட்ச மொத்த விலை 150 ரூபாய், லீக்ஸ் 1 கிலோகிராமின் உச்சபட்ச மொத்த விலை 120 ரூபாய், போஞ்சி 1 கிலோகிராமின் உச்சபட்ச மொத்த விலை 120 …

Read More »

‘அமெரிக்கன் வொய்ஸ்’ ஒலிபரப்பு நிலையம் கொரோனா சிகிச்சை நிலையமாக மாறுகிறது

சிலாபம், இரணவில் பகுதியில் அமைக்கப்பட்ட அமெரிக்கன் வொய்ஸ் ஒலிபரப்பு நிலையத்தை கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான வைத்தியசாலையாக மிகத் துரிதமாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார். அரசாங்கம் எடுத்துள்ள குறித்த தீர்மானித்ததையடுத்து அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் தொடர்பாக ஆராய்வதற்கு நேற்று (வியாழக்கிழமை) மாலை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அங்கு விசேட கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். சுமார் 50 நோயாளர்களுக்கு சிகிச்சை …

Read More »