யாழில் தேவையான பெற்றோல் உள்ளது - அரச அதிபர் அறிவிப்பு

யாழில் தேவையான பெற்றோல் உள்ளது - அரச அதிபர் அறிவிப்பு

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு தேவையான பெற்றோல் கையிருப்பில் உள்ளதால் மக்கள் பீதியடையத் தேவையில்லை எனவும் செயற்கைத் தட்டுபாட்டை தவிர்க்குமாறும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளார். 

மேலும் காங்கேசன்துறையிலுள்ள பெற்றோல் களஞ்சியமானது வழமைபோல் ஞாயிற்றுக்கிழமை மூடப்படுவதால் சகல எரிபொருள் நிலையங்களுக்கும் நாளை மறுதினம் திங்கட்கிழமையிலிருந்து பெற்றோல் விநியோகிக்கப்படு எனவும் தெரிவித்தார்.

மேலும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன தலைவர் திரு. டி. ஜே. ஏ. எஸ். டி. எஸ். ராஜகருணா அவர்களுடன் இன்றையதினம் தொலைபேசி மூலம் தாம் தொடர்புகொண்ட போது நாட்டுக்குத் தேவையான ஒரு மாதத்திற்கான பெற்றோல் கையிருப்பில் இருப்பதாக தம்மிடம் தெரிவித்துள்ளார் என்பதனை அரசாங்க அதிபர் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.