வலைபாயுதே

யாழ். மாநகரசபையின் அலட்சியம் : குப்பைக்க..

யாழ். மாநகரசபையின் அலட்சியம் : குப்பைக்கிடங்காக மா..

நல்லூரின் போராட்டத்தில் விபரம் கேட்ட வெள..

நல்லூரின் போராட்டத்தில் விபரம் கேட்ட வெள்ளக்காரர்

யாழ்ப்பாணத்தின் மறைந்திருக்கும் சொர்க்கம..

யாழ்ப்பாணத்தின் மறைந்திருக்கும் சொர்க்கம் | 2000 ஆ..

லைப்ஸ்டைல்

உங்க தலைமுடி வறண்டு தேங்காய் நார் போல் இ..

தற்போதைய நவீன வாழ்க்கை முறையுடன் மாசடைந்த சுற்றுச்சூழல் வெளிப்பாடும், கெமிக்கல் பொருட்களின் அதிகப்படியான உபயோகத்தினாலும் தலைமுடியின் ஆரோக்கியம் சரிந்து வருகிறது. பொதுவாக நமது தலைமுடியானது 100% கெரட்டினால் ஆனது. கெரட்டின் என்பது ஒரு புரோட்டீனாகும். இந்த கெரட்டின் தலைமுடியில் 65% முதல் 95% வரை உள்ளது. இந்த கெரட்டின் அளவு தலைமுடியில் குறையும் போது தான் தலைமுடி பொலிவையும், மென்மைத்தன்மையையும் இழந்து பலவீனமாகவும், தேங்காய் நார் போன்றும் மாறுகிறது. இந்நிலையில் தற்போது அழகு நிலையங்களில் தலைமுடியின் மென்மைத்தன்மையையும், பொலிவையும் மேம்படுத்த கெரட்டின் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இந்த சிகிச்சையில் முடியின் சேதத்தைச் சரிசெய்யவும், முடி உடைவதைத் தடுக்கவும், முடி வறட்சியைக் குறைக்கவும், முடிக்கு அதிகப் பொலிவை அளிக்கவும் கெரட்டின் தலைமுடியின் மீது பூசப்படுகிறது. ஆனால் சிலர் கெரட்டின் சிகிச்சைகள் முடி வளர்ச்சியை அதிகரிக்கும் என்று சிலர் கூறினாலும், இவை முக்கியமாக முடியின் தோற்றத்தை மேம்படுத்தவும், முடியை எளிதாகக் கையாளும் வகையில் மாற்றவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. எனவே நீங்கள் உங்களின் தலைமுடியின் வளர்ச்சியை ஊக்குவிக்க நினைத்தால், சமச்சீரான உணவு முறை, மன அழுத்த மேலாண்மை மற்றும் சரியான தலைமுடி பராமரிப்பு பொருட்களை வாங்கி பயன்படுத்துவது போன்றவற்றில் கவனம் செலுத்தி வந்தால், நல்ல பலனைப் பெறலாம்.