O/L பரீட்சையில் பெயில் ; உயிரை மாய்க்க முயன்ற மாணவி

O/L பரீட்சையில் பெயில் ; உயிரை மாய்க்க முயன்ற மாணவி

இரத்தினபுரி, கலவானை - ரத்தெல்ல பிரதேசத்தில் உள்ள ஆற்றில் குதித்து உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற மாணவி ஒருவர் பிரதேசவாசிகளால் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கலவானை - வெத்தாகல பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதுடைய மாணவி ஒருவரே இவ்வாறு விபரீத முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

O/L பரீட்சையில் பெயில் ; உயிரை மாய்க்க முயன்ற மாணவி | Failed In Ol Exam Student Attempts Suicide

2024 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் கடந்த 11 ஆம் திகதி காலை வெளியான நிலையில் பரீட்சையில் தோல்வியடைந்த கவலையில் குறித்த மாணவி தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றமை பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் மாணவி மேலதிக சிகிச்சைக்காக இரத்தினபுரி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.