கால்வாயில் கவிழ்ந்த கார்; ஒருவர் பலி

கால்வாயில் கவிழ்ந்த கார்; ஒருவர் பலி

 மஹியங்கனை - பதுளை பிரதான வீதியில் இன்று (15) காலை பயணித்த கார் ஒன்று மஹியங்கனை 17வது மைல்கல்லுக்கு அருகில் வியன கால்வாயினுள் கவிழ்ந்ததில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து சம்பவம் இன்று காலை 06:50 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கால்வாயில் கவிழ்ந்த கார்; ஒருவர் பலி | One Dead After Car Overturns In Canal

மஹியங்கனை பொலிஸ் பயிற்சி பாடசாலையின் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து கால்வாயில் கால்வாயில் கவிழ்ந்த காரை மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட வாகனத்தின் உள்ளே இருவர் இருந்துள்ளனர்.

அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மஹியங்கனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், அனுமதிக்கப்பட்ட நேரத்தில் இருவரும் உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

உயிரிழந்த இருவரும் மொனராகலை, ஒக்கம்பிட்டியவைச் சேர்ந்தவர்கள் ஆவர். இந்த விபத்து சம்பவம் தொடர்பில் மஹியங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.