கொரோனா தொற்று மேலும் அதிகரிப்பு!

கொரோனா தொற்று மேலும் அதிகரிப்பு!

நாட்டில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 94ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு தொற்று உறுதிசெய்யப்பட்டவர் ஈரானில் இருந்து நாட்டுக்கு அழைத்துவரப்பட்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நாட்டில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,967 ஆக பதிவாகியுள்ளதுடன் தற்போது 116 பேர் தொடர்ந்து சிகிச்சைபெற்று வருவகின்றனர். இலங்கையில் கொரோனாவால் இதுவரை 11 பேர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து மேலும் 2 கடற்படை வீரர்கள் குணமடைந்த நிலையில் பூரண குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 894 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.