இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஆசிரியர் சுட்டுப் படுகொலை.

இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஆசிரியர் சுட்டுப் படுகொலை.

அனுராதபுரத்தில் இரண்டு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் நேற்று (13) இரவு அனுராதபுரம் இராஜாங்கனை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஆசிரியர் சுட்டுப் படுகொலை | Teacher Shot Dead In A Clash Between Two Groupsநான்கு பிள்ளைகளின் தந்தையான எம்.ரி. மாரப்பன (வயது 62) என்பவரே இதன்போது உயிரிழந்துள்ளார்.

இவர் ஓய்வுபெற்ற ஆசிரியர் என்று சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் சடலம் பிரேத பரிசோதனைக்காக இராஜாங்கனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.