குரங்கினால் நடந்த படுகொலை: தொடரும் விசாரணை!

குரங்கினால் நடந்த படுகொலை: தொடரும் விசாரணை!

செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்டு வந்த குரங்கு ஒன்று சிறுமியொருவரை கடித்ததால் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் நடத்தப்பட்ட கத்தி குத்து தாக்குதலால் ஒருவர் பலியாகியுள்ளார்.

செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்ட குரங்கு உயிரிழந்தவர்களின் மகள்களில் ஒருவரைக் கடித்ததால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றியதில் குரங்கை வளர்த்து வந்த நபர், சிறுமியின் தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் மாத்தளை - யடவத்தை, துத்திரிபிட்டிய, டல்லேவாவ பகுதியைச் சேர்ந்த சரத் வீரசிங்க (55) என்பவரே உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குரங்கினால் நடந்த படுகொலை: தொடரும் விசாரணை! | One Person Killed In Knife Attack

கொலை தொடர்பில் சந்தேக நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை யடவத்தை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.