
விண்வெளியில் வெற்றிகரமாகப் பிரிக்கப்பட்ட ஸ்பெடெக்ஸ் விண்கலன்கள்
ஸ்பெடெக்ஸ் விண்கலன்கள் விண்வெளியில் வெற்றிகரமாகப் பிரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த டிசம்பர் 30 ஆம் திகதி விண்ணில் ஏவப்பட்ட 2 விண்கலன்கள், ஜனவரி 16ஆம் திகதி விண்வெளியிலேயே இணைக்கப்பட்டன.
தொழில்நுட்ப பிரச்சனையால் இவற்றைப் பிரிக்கும் பணி ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும் தொடர் முயற்சிகளின் பின்னர் தற்போது இவை பிரிக்கப்பட்டுள்ளன.
இந்த சாதனை விண்வெளி நிலையம் அமைப்பது, ககன்யான், சந்திரயான் 4 திட்டங்களுக்கு வழிவகுக்கும் என இஸ்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.