
2030 ஆம் ஆண்டுக்குள் காடழிப்பை நிறுத்துவதாக உலக தலைவர்கள் உறுதி
கொப்26 (COP26) மாநாட்டில் பங்கேற்றுள்ள உலக தலைவர்கள் இன்றைய தினம் வானிலை மாற்றம் தொடர்பான முக்கிய ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடவுள்ளனர்.
எதிர்வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் காடழிப்பை நிறுத்துவதற்கு உறுதியளிக்கும் விதத்தில் இந்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, இந்த ஒப்பந்தத்தில் பிரேஸிலும் கையொப்பமிடவுள்ளது.
இந்த நடவடிக்கையானது, அமேசன் மழைக்காடுகளில் ஏற்படும் பாரிய அளவு காடழிப்பை தடுக்க உதவும் என வல்லுநர்கள் தெரிவிகின்றனர்.
அத்துடன் மீள் காடாக்களுக்கு பாரிய நிதி ஒதுக்கப்படவுள்ளது.
காடழிப்பை தடுப்பதன் மூலம் வானிலை மாற்றத்தை தடுக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் உலகில் 85 சதவீதமான காடுகளை உள்ளடக்கிய 100க்கும் மேற்பட்ட நாடுகள் குறித்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ளன.