
யாழில் வீடொன்றில் இன்று அதிகாலை நிகழ்ந்த பயங்கரம்
யாழ்ப்பாணம், கொழும்புத்துறை பகுதியில் உள்ள வீடொன்றின் மீது அடையாளம் தெரியாத நபர்களால் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச் சம்பவம் இன்று (15) அதிகாலை 5 மணி அளவில் இடம்பெற்றதாக தெரியவந்துள்ளது. யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் பணியாற்றும் சிறைக் காவலாளி ஒருவரின் வீட்டின் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
வீடு தீப்பற்றி எரிந்ததை அடுத்து , வீட்டில் உறக்கத்தில் இருந்தவர்கள் எழுந்து தீயினை அணைத்துள்ளதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கான காரணம் தெரியவராத நிலையில் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.