
பெண் கான்ஸ்டபிளை ஆபாசமாக திட்டிய உப பொலிஸ் பரிசோதகர்
பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை ஆபாச வார்த்தைகளால் திட்டிய உப பொலிஸ் பரிசோதகர் தங்காலை பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தினால் நேற்று (14) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் அம்பாந்தோட்டை, தங்காலை பொலிஸ் ஊழல் தடுப்பு பிரிவில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தங்காலை பொலிஸ் தலைமையகத்தில் கடமையாற்றும் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கடந்த 12 ஆம் திகதி தங்காலை பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தில் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் உப பொலிஸ் பரிசோதகர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதான உப பொலிஸ் பரிசோதகர் இன்று செவ்வாய்க்கிழமை (15) தங்காலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.