Breaking News
Home / admin (page 3)

admin

புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர் படகுகளுடன் சிறைப்பிடிப்பு- இலங்கை கடற்படையினர் நடவடிக்கை

பொங்கல் பண்டிகை விடுமுறைக்கு பிறகு நேற்று காலை கடலுக்கு சென்ற நிலையில் மீனவர்கள் 4 பேர் சிறைப்பிடிக்கப்பட்டது மீனவர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. மீனவர்கள் படகுகளுடன் சிறைப்பிடிப்பு (கோப்பு படம்) அறந்தாங்கி: புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம், கோட்டைப்படினம் பகுதி மீன்பிடி துறைமுகங்களில் இருந்து தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்கிறார்கள். இந்தநிலையில் நேற்று காலை ஜெகதாப்பட்டினத்தில் இருந்து 96 விசைப்படகுகளில் மீன்துறை அலுவலக …

Read More »

சினிமாவிற்கு சென்சார் தேவையே இல்லை – எஸ்.வி.சேகர்

அமலாபால் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அதோ அந்த பறவை போல’ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நடிகர், இயக்குனர், அரசியல் பிரமுகர் எஸ்.வி.சேகர், சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார். இவ்விழாவில் எஸ்.வி.சேகர் பேசும்போது, ‘அதோ அந்த பறவை போல பாட்டு வரி தான் இப்படத்தின் தலைப்பு. நம்மிடம் இப்படியான படங்கள் வருவதற்கு இப்போது தான் வாய்ப்பு வந்துள்ளது. சினிமாவில் இரண்டு வகை. ஓடும் படம், ஓடாத படம் அவ்ளோ தான். சினிமாவில் …

Read More »

வரி ஏய்ப்பு புகார் எதிரொலி – ராஷ்மிகா நேரில் ஆஜராக உத்தரவு

வரி ஏய்ப்பு புகார் எதிரொலியாக நடிகை ராஷ்மிகா வீட்டில் நடந்த சோதனையைத்தொடர்ந்து விசாரணைக்காக அவரை நேரில் ஆஜராக வருமான வரித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். தெலுங்கில் முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரை தொடர்ந்து கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள குக்குலூரு கிராமத்தில் இருக்கும் அவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சென்று சோதனை நடத்தினார்கள். சோதனையின்போது நடிகை ராஷ்மிகா படப்பிடிப்புக்காக சென்னை …

Read More »

கிராமகா எனக்கு நிஜ வாழ்க்கையில் தைரியத்தை கொடுத்தது – அமலாபால்

அமலாபால் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘அதோ அந்த பறவை போல’. ஆக்‌ஷன் அட்வெஞ்சர் திரில்லர் படமாக உருவாகி இருக்கும் இப்படத்தை ஜோன்ஸ் தயாரித்துள்ளார். அறிமுக இயக்குனர் கே.ஆர்.வினோத் இயக்க, அருண் கதை எழுதியுள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் ஜோன்ஸ், நடிகை அமலாபால், இயக்குனர் கே.ஆர்.வினோத் உள்ளிட்ட படக்குழுவினருடன் நடிகர், இயக்குனர், அரசியல் பிரமுகர் எஸ்.வி.சேகர், தயாரிப்பாளர் ஜான் மேக்ஸ், இயக்குனர் திருமலை …

Read More »

கடைசி ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியா பந்து வீச்சு: ஆஸி. அணியில் ஹாசில்வுட்

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் நடக்கிறது. இதில் வெற்றி பெற்ற அணி தொடரை கைப்பற்றும். டாஸ் சுண்டபட்டதில் ஆஸ்திரேலியா அணி கேப்டன் ஆரோன் பிஞ்ச் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்கிறது. இந்திய அணியில் மாற்றமில்லை. ஆஸ்திரேலியா அணியில் ஹாசில்வுட் சேர்க்கப்பட்டுள்ளார்.

Read More »

9 மாவட்ட பஞ்சாயத்துகளுடன் நகராட்சி, பேரூராட்சிக்கு அடுத்த மாதம் தேர்தல்

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 27 மாவட்டங்களில் கடந்த மாதம் 27, 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற்றது. ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட பஞ்சாயத்து ஆகியவற்றுக்கு நடத்தப்பட்ட இந்த தேர்தலில் 2 கோடியே 58 லட்சத்து 70 ஆயிரத்து 941 பேர் ஓட்டு போட்டனர். ஊராட்சி தலைவர் நேரடியாக தேர்வு செய்யப்பட்டார். ஊராட்சி கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்கள் ஆகியோரும் ஓட்டு சீட்டு மூலம் …

Read More »

ரத்த கொதிப்பு என்பது ஒரு வியாதி அல்ல

ரத்தகொதிப்பு என்பது ஒரு வியாதி அல்ல. உடல் ஆரோக்கிய மின்மையின் வெளிப்பாடுதான் என ராணிப் பேட்டை சிப்காட் ஜி.கே.மருத்துவமனை டாக்டர்.கே.ஜெய்குமார் தெரிவித்துள்ளார். திருடன் வருகிறான் என்று நாய் குரைத்தால் நாயை அடக்குவீர்களா? அல்லது திருடனை பிடிக்க முயற்சிப்பீர்களா. இதில் நாய் என்பது ரத்த அழுத்தம், திருடன் என்பது காரணிகள். உயர் ரத்த அழுத்தம் பி.பி. என்பது பல்வேறு காரணங்களால் உருவாகும். ஆனால் இது ஒரு வியாதி அல்ல. உடல் ஆரோக்கியமின்மையின் …

Read More »

அரேபியன் சிக்கன் மண்டி பிரியாணி

தேவையான பொருட்கள் சிக்கன் எலும்புடன் – 500 கிராம் (1 பெரிய துண்டு), வெங்காயம் – 1 தக்காளி – 1, பச்சை மிளகாய் – 1, இஞ்சி, பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன், பிரியாணி இலை – 3, நெய் – 1 டீஸ்பூன், ஏலக்காய் – 2, பட்டை – 2, லவங்கம் – 1, மிளகு – 1 டீஸ்பூன், ஆலிவ் ஆயில் …

Read More »

வெற்றி கொடுக்கும் வெள்ளைக் கொடி

வெள்ளைக் கொடி பற்றி தெரிந்திருப்பீர்கள். படங்களில் பார்த்திருக்கலாம் இரண்டு கும்பல்களுக்கிடையே போட்டி நிலவும் போது, சண்டைகள் உச்சம் தொடும் போது, அதை தொடர விரும்பாத அல்லது தொடர முடியாத ஒரு கோஷ்டி வெள்ளைக் கொடியை காட்டுவர்கள். அதாவது நாங்கள் சமாதானத்திற்குத் தயாராக இருக்கிறோம் என்பதாக. பொதுவாக வெள்ளைக் கொடி காட்டப்பட்டு விட்டால் எதிர் தரப்பினரும் அதற்கு ஒத்துக் கொண்டு சமாதானமாக போவதே இயல்பு. வெள்ளைக் கொடி என்றவுடன் தொண்டைமானுக்கும் அதியமானுக்கும் …

Read More »

ஏமன் – ராணுவ குடியிருப்புகள் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் 24 வீரர்கள் பலி

ஈரான் அரசின் ஆதரவுடன் ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஹவுதி இன மக்கள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள்மீது உள்நாட்டு அரசுப் படைகளும் அண்டைநாடான சவுதி அரேபியா தலைமையிலான நேசநாட்டுப் படைகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில், ஏமன் நாட்டின் வடகிழக்கில் மாரீப் மாகாணத்தின் அல்-மிலா பகுதியில் ராணுவ குடியிருப்புகள் மீது கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் வகையை சேர்ந்த ஏவுகணை ஒன்று தாக்குதல் …

Read More »