கொரோனா அச்சம் – ஓமானிலிருந்து 290 இலங்கையர்கள் நாடு திரும்பினர்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஓமானில் சிக்கித் தவித்த 290 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விசேட விமானத்தில் அவர்கள் நேற்று (புதன்கிழமை) இரவு ஓமானின் மாஸ்கட்டிலிருந்து நாட்டை வந்தடைந்தனர்.
விமான நிலையத்தை வந்தடைந்த அனைவருக்கும் பி.சி.ஆர்.சோதனை மேற்கொள்ளப்பட்டதுடன், அவர்களை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் உலகை அச்சுறுத்தி வரும் நிலையில், வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வரும் நடவடிக்கை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.