Breaking News
Home / admin

admin

ஊரடங்கு சட்டத்தை மீறிய 25 இளைஞர்கள் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது

ஊரடங்கு சட்டத்தை மீறிய 25 இளைஞர்கள் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் ஊரடங்கு சட்ட காலப்பகுதியில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த மற்றும் எந்தவித காரணமுமின்றி அநாவசியமான முறையில் நடமாடித் திரிந்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் மேலதிக விசாரணைக்காக பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

Read More »

வடக்கு கொரோனா வலயமாக பிரகடனம் என்ற செய்தியினை மறுத்தது ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு!

வட மாகாணம் கொரோனா அபாய வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக வெளியான தகவலினை ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு மறுத்துள்ளது. வட மாகாணம் கொரோனா அபாய வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட தகவல் வைரலானது. இந்தநிலையிலேயே குறித்த தகவலினை ஜனாதிபதி ஊடகப்பிரிவின் பணிப்பாளர் மொஹான் சமரநாயக்க மறுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் மறு அறிவித்தல் வரும் வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த தகவல் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை, கொரோனா பரவக் கூடிய அபாய …

Read More »

கொரோனா அச்சம் காரணமாக ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என அச்சம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று(வெள்ளிக்கிழமை) இவர் அனுமதிக்கப்பட்டிருந்ததாக யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி குறிப்பிட்டுள்ளார். அத்துடன், கடந்த 2ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரையான காலப்பகுதியில் கொரோனா தொற்று சந்தேகத்தின் பேரில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை செய்து 33 பேர் வெளியேறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Read More »

சுனில் ரத்னாயக்கவிற்கு பொது மன்னிப்பு – சர்வதேச மன்னிப்பு சபை கண்டனம்!

சுனில் ரத்னாயக்கவிற்கு பொது மன்னிப்பு வழங்கியுள்ள ஜனாதிபதியின் செயலுக்கு சர்வதேச மன்னிப்பு சபை கண்டனம் தெரிவித்துள்ளது. சர்வதேச மன்னிப்பு சபையின் தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் பிராஜ் பட்நாயக் இவ்வாறு கண்டனம் வெளியிட்டுள்ளார். முன்னாள் இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்னாயக்கவிற்கு பொது மன்னிப்பு வழங்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எடுத்த தீர்மானம், சமூகத்திற்கு கவலையளிக்கும் செய்தி எனவும் அவர் கூறியுள்ளார். இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பிலான பொறுப்புகூறல் மிகவும் குறைந்தளவிலேயே உள்ளதாகவும் …

Read More »

நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவது தொடர்பாக அரசாங்கம் ஆராய்வு!

கலைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகின்றது. கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை குறித்து ஆராய்வதற்காகவே இந்த நடவடிக்கையை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை ஏப்ரல் 30ஆம் திகதி பின்னர் இடைக்கால கணக்குகள் நிறைவடைந்த பின்னர் அரசாங்க செலவுகளுக்கு பணம் ஒதுக்கிக் கொள்ள வாய்ப்பு இல்லாமை, வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை காரணமாக மேலும் 3 …

Read More »

பிலிப்பைன்ஸ் ராணுவ தளபதிக்கு கொரோனா பாதிப்பு

பிலிப்பைன்ஸ் நாட்டில் 707 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 45 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், அந்நாட்டு ராணுவ தளபதி பெலிமோன் சான்டோஸ் ஜூனியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தாக்கிய ஒரு ராணுவ அதிகாரியை சந்தித்ததால், அவர் கடந்த 4 நாட்களாக தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார். தற்போது, அவருக்கு கொரோனா உறுதி ஆனபோதிலும், அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படவில்லை. அவர் குடியிருக்கும் ராணுவ குடியிருப்பிலேயே அவரது உடல்நிலையை டாக்டர்கள் கண்காணித்து வருகிறார்கள். அவர் …

Read More »

இரண்டு ஆண்டுகளில் லட்சக்கணக்கில் விற்பனையான சியோமி Mi டி.வி. சீரிஸ்

சியோமியின் Mi டி.வி. பிராண்டு இந்திய சந்தையில் இரண்டு ஆண்டுகளில் சுமார் 40 லட்சம் யூனிட்களை விற்பனை செய்து இருப்பதாக Mi டி.வி. இந்திய அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் பட்ஜெட் ரக டி.வி.க்களை வெளியிட்டு Mi டி.வி. பிராண்டு பிரபலமானது. ஸ்மார்ட்போன் சந்தையில் பிரபலமானதை தொடர்ந்து சியோமி பிராண்டு டி.வி. சந்தையில் களமிறங்கியது. விற்பனை மைல்கல் கடந்து இருப்பதை தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் …

Read More »

மேல் மாகாணத்தில் மாத்திரம் இதுவரை 50 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்!

இலங்கையில் இதுவரை 3 வெளிநாட்டவர்கள் உள்ளடங்களாக 106 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 50 பேர் மேல் மாகாணத்தில் உள்ளவர்கள் என அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன., சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவின் தரவுகளுக்கு அமைய கொழும்பில் இதுவரை 25 கொரோனா தொற்றாளர்களும் களுத்துறையில் 15 தொற்றாளர்களும் கம்பஹாவில் 10 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த 24 ஆம் திகதி கொழும்பு உள்ளிட்ட மேல் மாகாணத்தில் …

Read More »

ஒரே நாளில் 3000 பேர் பலி… கொரோனா உயிரிழப்பு 27 ஆயிரத்தை தாண்டியது

உயிர்க்கொல்லி வைரசான கொரோனா வைரசை ஒழிக்க முடியாமல் உலக நாடுகள் சிக்கி திணறி வருகின்றன. உலகின் 199 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. தடுப்பு மருந்துகள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், இந்த வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இன்று காலை நிலவரப்படி, உலகம் முழுவதும் இதுவரை 5 லட்சத்து 97 ஆயிரத்து 185 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. இவர்களில் …

Read More »

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவு

இந்தோனேசியாவின் பப்புவா மாகாணத்தில் உள்ள ஜெயப்புரா மாவட்டத்தில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி அதிகாலை 4.36 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 11 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சில வினாடிகள் நீடித்த இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் பீதியடைந்த …

Read More »