
நாடு முழுவதும் சோதனைச் சாவடிகள்! விசேட பாதுகாப்பு அமுல்
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஸ்ரீலங்கா முழுவதும் விசேட பாதுகாப்பு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ஜாலிய சேனாராத்ன தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தலுக்கான பாதுகாப்பு தொடர்பில் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் பேசிய அவர், இன்று முதல் தேர்தல் கடமைகள் முடியும் வரை குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சோதனைச் சாவடிகள் நாடு முழுவதும் இருக்கும்.
இதேவேளை வாக்குப்பெட்டிகளை வாக்கெண்ணும் நிலையங்களுக்கு கொண்டு செல்லும் போது கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படுமென அவர் தெரிவித்துள்ளார்