Breaking News
Home / admin (page 2)

admin

84/0 என்ற நிலையில் 36 ரன்களுக்குள் 10 விக்கெட்டை இழந்து தோல்வியை சந்தித்த பிரிஸ்பேன் ஹீட்

பிக் பாஷ் டி20 லீக்கில் பிரிஸ்பேனில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மெல்போர்ன் ரெனேகட்ஸ் – பிரிஸ்பேன் ஹீட் அணிகள் மோதின. முதலில் விளையாடிய மெல்போர்ன் ரெனேகட்ஸ் 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. பின்னர் பிரிஸ்பேன் ஹீட் 165 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக களம் இறங்கிய ஹீஸ்லெட், கிறிஸ் லின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கிறிஸ் லின் 15 பந்தில் …

Read More »

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: வெற்றியுடன் தொடங்கியது இந்தியா

13-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. ‘ஏ’ பிரிவில் அங்கம் வகிக்கும் நடப்பு சாம்பியனான இந்திய அணி, இலங்கையுடன் நேற்று மோதியது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 297 ரன்கள் குவித்தது. முதல் 6 பேட்ஸ்மேன்களும் 20 ரன்களுக்கு மேல் எடுத்தனர். …

Read More »

ஐந்து 20 ஓவர், 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டி: இந்திய அணி இன்று நியூசிலாந்து பயணம்

விராட் கோலி தலைமையிலான அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வெற்றிகரமாக முடித்தது. அடுத்து நியூசிலாந்துடன் இந்தியா விளையாடுகிறது. ஐந்து 20 ஓவர் போட்டி, 3 ஒருநாள் ஆட்டம் மற்றும் 2 டெஸ்டில் ஆடுவதற்காக இந்திய அணி இன்று பெங்களூருவில் இருந்து நியூசிலாந்து புறப்படுகிறது. சிங்கப்பூர் வழியாக ஆக்லாந்துக்கு வீரர்கள் சென்று அடைகிறார்கள். இந்தியா – நியூசிலாந்து மோதும் முதல் 20 ஓவர் ஆட்டம் ஆக்லாந்தில் வருகிற 24-ந்தேதி நடக்கிறது. …

Read More »

ரோகித் சர்மாவின் ஆட்டம் அருமை- விராட்கோலி புகழாரம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றி இந்திய அணி பழிதீர்த்தது. பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த 3-வது மற்றும் கடைசி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 286 ரன் குவித்தது. முன்னாள் கேப்டன் ஸ்டீவ் சுமித் சிறப்பாக ஆடி சதம் அடித்தார். அவர் 132 பந்தில் 131 ரன்னும் (14 பவுண்டரி, 1 சிக்சர்), லபுஷ்சேன் …

Read More »

நியூயார்க் நகரை காக்க சுவர் கட்ட டிரம்ப் எதிர்ப்பு

அமெரிக்காவின் நியூயார்க் நகரை புயல் உள்ளிட்ட பேரழிவில் இருந்து காப்பதற்கு கடல் சுவர் ஒன்றை கட்டும் யோசனையை ராணுவ என்ஜினீயர்கள் கூறி உள்ளனர். இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கு 119 பில்லியன் டாலர் (சுமார் ரூ.8 லட்சத்து 33 ஆயிரம் கோடி) செலவாகும். கடல் சுவரை கட்டி முடிப்பதற்கு 25 ஆண்டுகள் ஆகும் என அவர்கள் கணித்துள்ளனர். ஆனால் இந்த திட்டத்துக்கு ஜனாதிபதி டிரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் …

Read More »

பட்ஜெட் அச்சடிப்பு பணி – நிர்மலா சீதாராமன் அல்வா வழங்கி தொடங்கி வைத்தார்

பாராளுமன்றத்தில் ஆண்டுதோறும் மத்திய நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) சமர்ப்பிப்பதற்கு முன்னர் அச்சடிக்கும் வேலை தொடங்கும் போது பழங்கால சம்பிரதாயப்படி அல்வா எனும் இனிப்பு பொருள் தயாரித்து, இதுதொடர்பான பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு விநியோகம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், டெல்லியில் உள்ள நிதித்துறை அமைச்சகத்தின் தலைமை அலுவலகத்தில் மத்திய நிதித்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் முன்னிலையில் இன்று அல்வா தயாரிக்கப்பட்டு, அனைவருக்கும் பரிமாறப்பட்டது. இதையடுத்து 2020-21ம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கை …

Read More »

குடியரசு தின விழாவில் நாசவேலைக்கு சதி- தென் மாநிலங்களில் 17 பயங்கரவாதிகள் பதுங்கல்

தமிழகத்தில் கடந்த 2014-ம் ஆண்டு இந்து இயக்க பிரமுகர்களை குறி வைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதும், கொலை சம்பவங்களில் ஈடுபட்டதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போது சென்னை பாடியில் இந்து முன்னணி தலைவர் சுரேஷ்குமார் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பயங்கரவாதிகளான காஜா மொய்தீன், சையது அலி நவாஸ், அப்துல் சமீம் ஆகியோர் கடந்த டிசம்பர் மாதம் ஜாமீனில் வெளிவந்து தலைமறைவானார்கள். இவர்கள் 3 …

Read More »

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படை நடத்திய தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரக்சிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிக்கு சென்ற அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரைக் கண்டதும் தப்பியோட முயற்சித்தனர். அப்போது அவர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதிகள் 3 பேர் கொல்லப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். பயங்கரவாதிகள் நடமாட்டத்தை தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Read More »

விஜயகாந்த் மகன் திருமணத்துக்கு பிரதமர் மோடி வருவாரா?

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன். கடந்த ஒரு வருட காலமாக அரசியலில் ஈடுபட்டு வரும் நிலையில் அவருக்கு முன்பு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. கோவையை சேர்ந்த தொழிலதிபர் இளங்கோவின் மகள் கீர்த்தனாவை கரம் பிடிக்க உள்ளார். விஜயகாந்த் குடும்பம் திருமணத்திற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு வீட்டில் நடக்கும் முதல் சுப நிகழ்வு என்பதால் இந்த திருமணத்தை சிறப்பாக நடத்த வேண்டும் …

Read More »

கடனை மீளச் செலுத்த கடன் பெறும் மின்சார சபை

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு வழங்கவேண்டிய கடன் தொகையை மீள செலுத்துவதற்காக மேலும் கடன் பெறுவற்கு மின்சார சபை தீர்மானித்துள்ளது. அரச வங்கிகள் ஊடாக கடனைப் பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்ப்பதாக மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கதக்க சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. 84 பில்லியன் ரூபா கடன், பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு செலுத்த வேண்டியுள்ளது. கடன் தொகையை செலுத்தத் தவறினால், எரிபொருள் விநியோகிக்கப்பட மாட்டாது என பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஏற்கனவே பல்வேறு சந்தர்ப்பங்களில் அறிவித்தல் விடுத்துள்ளது.

Read More »