Breaking News
Home / யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம்

கருவில் வளரும் சிசுவுக்கு நச்சாக மாறும் திட்டத்தினை எதிர்த்து யாழில் போராட்டம்

5G அலைவரிசை கோபுரம் அமைக்கும் செயற்பாடுகளை நிறுத்தக் கோரி, யாழ். மாநகர முதல்வரின் அலுவலகத்தை முற்றுக்கையிட்டு அப்பகுதி மக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். இதன்போது, யாழ்.மாநகர சபையின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள், வெளிநடப்புச் செய்ததினால், சபை அமர்வுகள் முடக்கப்பட்டன. யாழ்.மாநகர சபையின் அமர்வு இன்று காலை 9.00 மணியளவில் ஆரம்பமாகவிருந்த நிலையில், பொது மக்கள் அணிதிரண்டு, மாநகர முதல்வரின் அலுவலகம் மற்றும் சபை வாயிலை மூடி போராட்டத்தில் …

Read More »

இந்து ஆலயங்களில் மிருகபலி வேள்வித்தடையை நீக்கியது மேன்முறையீட்டு நீதிமன்றம்

இந்து ஆலயங்களில் மிருகபலி வேள்வி நடத்த தடை விதித்து யாழ். மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. யாழ். குடாநாட்டு எல்லைக்கு உட்பட்ட இந்து ஆலயங்களில் மிருகங்களை பலியிடுவதற்கு யாழ். மேல் நீதிமன்றத்தால் முற்றாக தடை விதிக்கப்பட்டிருந்தது. அகில இலங்கை சைவ மகா சபையினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு கடந்த 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24ஆம் திகதி யாழ். மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது. …

Read More »

மன்னாரில் கிடைத்த 13 ஆம் நூற்றாண்டுக்குரிய பொக்கிஷம்

மன்னார் குருந்தன்குளம் குளத்திற்கு அருகில் உள்ள விநாயகர் கோயிலில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்த பண்டைய காலத்து விநாயகர் சிலை மற்றும் எச்சங்கள் கிடைத்துள்ளதாக யாழ். தொல் பொருள் திணைக்கள அலுவலகம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை மற்றும் யாழ். தொல் பொருள் திணைக்கள அலுவலக அதிகாரிகள் இணைந்து இந்த அகழ்வாராய்ச்சியை மேற்கொண்டனர். அகழ்வாராய்ச்சியில் கிடைத்த விநாயகர் சிலையை ஆய்வு செய்த யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் தொல்லியல் …

Read More »

யாழில் தொலைக்காட்சி கேபிள்கள் அறுக்கப்பட்டுள்ளன

யாழ்ப்பாணத்தில் இயங்கும் தொலைக்காட்சி அலைவரிசை நிறுவனம் ஒன்றின் கேபிள்கள் தேசிய அரசியல் கட்சி சார்ந்தவரின் குழுவால் நேற்றையதினம் அறுக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளுக்கான கேபிள் இணைப்பு சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதி மற்றும் காங்கேசன் துறை வீதி ஆகியவற்றில் மின் கம்பங்கள் ஊடாகச் சென்ற கேபிள்களே நேற்று இரவு இவ்வாறு அறுக்கப்பட்டுள்ளன. டிப்பர் வாகனத்தில் சென்ற …

Read More »

போதைப்பொருள் பயன்படுத்திக் கொண்டிருந்த போது யாழில் வசமாக சிக்கிய இளைஞர்கள்

யாழ்ப்பாணம் பெருமாள் கோவில் பகுதியில் வைத்து இளைஞர்கள் நால்வர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே அவர்கள் வசமாக சிக்கியுள்ளனர். சுமார் 20 முதல் 22 வயதுடைய இளைஞர்களே ஹெரோயின் போதைப்பொருள் பயன்படுத்திக் கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நால்வரும் யாழ். நகரப் பகுதியை சேர்ந்தவர்கள் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து …

Read More »

யாழில் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு சென்ற நபருக்கு நேர்ந்த கதி

ஐந்தாயிரம் ரூபா கள்ள நாணயத்தாளொன்றை வைத்திருந்த கடை உரிமையாளர் ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்த 56 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். பெருமாள் கோவில் பகுதியில் கடை வைத்திருக்கும் சந்தேகநபரிடம் அடையாளம் தெரியாத நபரொருவர் குறித்த நாணயத்தாளை கொடுத்து பொருட்கள் வாங்கியுள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு கஸ்தூரியார் வீதியில் உள்ள பெற்றோல் நிரப்பு நிலையத்தில் கடை உரிமையாளர் …

Read More »

பிரித்தானியாவில் ஒரே போட்டியில் உலக சாதனை படைத்த யாழ்ப்பாண யுவதி

பிரித்தானியாவின் லிவர்பூலில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண கூடைப்பந்து போட்டியில் இலங்கை அணி தனது முதலாவது வெற்றியை பதிவு செய்துள்ளது. சிங்கப்பூர் அணியுடன் இடம்பெற்ற போட்டியில் 88 – 50 என்ற கோல் கணக்கில் இலங்கை அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இலங்கை அணியின் வீராங்கனையான யாழ்ப்பாணத்தை சேர்ந்த தர்ஜினி ஷிவலிங்கம் புதிய உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார். ஒரு போட்டியில் தனி நபராக 76 கோல்களை பெற்று …

Read More »

வைத்தியசாலைக்குள் ரௌடிகள் அட்டகாசம்: நோயாளி மீது கொடூர தாக்குதல்; தடுத்த பொலிஸ்காரர் மீதும் தாக்குதல்!

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்குள் அத்துமீறி உள்நுழைந்த ரௌடிக்கும்பல் ஒன்று, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவரை கடுமையான தாக்கியதில் ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளார்.இந்த பரபரப்பு சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றது. ரௌடிக்கும்பலை தடுக்க முற்பட்ட வைத்தியசாலை ஊழியர்கள் அச்சுறுத்தப்பட்டனர். தாக்குதலை தடுக்க முற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. அவரும் சிறு காயமடைந்தார்.இதையடுத்து, வைத்தியசாலை பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரி, வைத்தியசாலை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.வடமராட்சியின் துன்னாலை பகுதியில் இடம்பெற்ற தகராறொன்றில் காயமடைந்த ஒருவர், …

Read More »

முல்லைத்தீவு காட்டுப்பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

முல்லைத்தீவு – மாதவாளசிங்கன் காட்டுப்பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்று இன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு, கள்ளப்பாட்டினை சேர்ந்த 36 வயதுடைய சூசைநாதன் அன்ரனி இமானுவேல் என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்காக மாஞ்சோலை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அத்துடன், பொலிஸார் மேலதிக விசாரணையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More »

அலங்கரித்த தேரில் பிரம்மாண்டமாய் வலம் வந்த நயினை நாகபூசனி அம்மன்

வரலாற்று சிறப்பு மிக்க நயினை நாகபூசனி அம்மன் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் தேர் திருவிழா இன்றையதினம் வெகு கோலாகலமாக இடம்பெற்றுள்ளது. இலட்சக்கணக்கான பக்தர்கள் புடை சூழ வசந்த மண்டப பூசையை தொடர்ந்து பிள்ளையார் மற்றும் முருகனுடன் நாகபூசனி அன்னையின் உள்வீதி உலா இடம்பெற்றது. அலங்கரித்த தேரில் பிரம்மாண்டமான கோலத்துடன் இடம்பெற்ற அன்னையின் தேர்த்திருவிழாவை காண இலட்சக்கணக்கானவர்கள் குழுமியிருந்தமை சிறப்பம்சம்.

Read More »