
யாழ். மாவட்டத்தில் 16 கிலோ கிராம் கேரள கஞ்சா போதைப்பொருளுடன் 3 பேர் கைது
யாழ்ப்பாணம் - உடுதுறை மற்றும் மன்னார் - உப்புக்குளம் பகுதிகளில் 16 கிலோ கிராம் கேரள கஞ்சா போதைப்பொருளுடன் 3 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படையினரால் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி யாழ்ப்பாணம் - உடுதுறை பகுதியில் டிங்கி படகொன்றில் இருந்து 11 கிலோ 905 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
இதன்போது இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேநேரம் மன்னார் - உப்புக்குளம் பகுதியில் கடற்படையினர் முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின் போது 4 கிலோ 460 கிராம் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்