ஜனநாயகன் டைட்டில் கார்டில் 'முதலமைச்சர்' விஜய்!

ஜனநாயகன் டைட்டில் கார்டில் 'முதலமைச்சர்' விஜய்!

நடிகர் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் கடந்த பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸ் ஆகும் என முதலில் அறிவிக்கப்பட்டது. 

 

ஆனால் அரசியல் காரணங்களுக்காக சென்சார் சான்றிதழ் கிடைக்க தாமதமான நிலையில் ரிலீஸ் தள்ளிப் போனது. அதனை தொடர்ந்து தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் படம் ரிலீஸ் ஆகவில்லை. தற்போது தேர்தல் முடிவுகள் வந்து அதில் விஜய் ஜெயித்து முதலமைச்சர் ஆகிவிட்டார். 

தற்போது ஜனநாயகன் எப்போது ரிலீஸ் ஆகும் என அந்த படத்தின் தயாரிப்பாளரிடம் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். 

விஜய்யின் முதலமைச்சர் பதவியேற்பு விழாவுக்கும் தயாரிப்பாளர் வந்திருந்தார். அவரிடம் செய்தியாளர்கள் ஜனநாயகன் ரிலீஸ் பற்றி கேள்வி எழுப்பிய போது இன்னும் இரண்டு வாரங்களில் ஜனநாயகன் திரைக்கு கொண்டு வர பணிகள் நடந்து வருவதாக தெரிவித்திருக்கிறார். 

மேலும் ஆங்கில டிவி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா "ஜனநாயகன் படம் விஜய் முதலமைச்சரான பிறகு தான் ரிலீஸ் ஆக வேண்டும் என விதி இருந்திருக்கிறது". 

"படத்தின் டைட்டில் கார்டிலும் முதலமைச்சர் விஜய் என்று தான் வரும்" என கூறி இருக்கிறார். இதனால் ரசிகர்கள் தற்போது கொண்டாட்டத்தில் இருக்கின்றனர்.