Breaking News
Home / விளையாட்டு (page 10)

விளையாட்டு

தோல்விக்கு பொறுப்பேற்க டோனி ஒருபோதும் தயங்கியது கிடையாது – மொகித் ஷர்மா

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரும், ஐ.பி.எல். போட்டியில் கடந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியவருமான 31 வயதான மொகித் ஷர்மா, இந்த சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இடம் பிடித்துள்ளார். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டி காலவரையின்றி தள்ளி வைக்கப்பட்டு இருக்கும் நிலையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நிர்வாகம் சார்பில் நடந்த இன்ஸ்டாகிராம் உரையாடலில் கலந்து கொண்ட மொகித் ஷர்மா …

Read More »

ஐபிஎல் போட்டிகளை ரசிகர்கள் இல்லாமல் நடத்தலாம்: ஹர்திக் பாண்ட்யா

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. போட்டி நடக்குமா? என்ற சந்தேகம் உள்ளது. ரசிகர்கள் இல்லாமல் மூடிய மைதானத்திற்குள் போட்டியை நடத்தலாம் என்ற ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்திய அணியின் ஆல்-ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யாவும் ரசிகர்கள் இல்லாமல் போட்டியை நடத்தலாம் எனத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஹர்திக் பாண்ட்யா கூறுகையில் ‘‘ரசிகர்கள் கூட்டம் இல்லாத நிலையில் ரஞ்சி கோப்பை போட்டியில் நான் விளையாடியுள்ளேன். அதன் …

Read More »

ரசிகர்கள் என்னை சில்வர் சிந்து என்று அழைப்பதை விரும்பவில்லை: பிவி சிந்து

இந்திய முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து சமூகவலைத்தளம் மூலம் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:- 2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் இறுதி ஆட்டத்தில் வெள்ளிப்பதக்கம் வென்றேன். அதன் பிறகு மற்ற போட்டிகளில் 6-7 வெள்ளிப்பதக்கங்களை பெற்றேன். இதனால் மக்கள் என்னிடம் சிந்துவுக்கு இறுதிப்போட்டி என்றாலே பயம் வந்து விடுகிறது என்று பேசத் தொடங்கினர். கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் சுவிட்சர்லாந்தில் நடந்த உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் மீண்டும் இறுதிப்போட்டிக்குள் …

Read More »

உலக கோப்பை தோல்வியில் இருந்து நாங்கள் இன்னும் மீளவில்லை: கேஎல் ராகுல் சொல்கிறார்

இந்திய கிரிக்கெட் அணி வீரர் கேஎல் ராகுல் ஊரடங்கு அனுபவம் மற்றும் கிரிக்கெட் ஆட்டம் குறித்து டெலிவிஷனுக்கு அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:- நானும், எனது குடும்பமும் பெங்களூருவில் பாதுகாப்பாக வசித்து வருகிறோம். பயிற்சியில் என்னால் என்ன செய்ய முடியுமோ அதனை செய்து நேரத்தை கழிக்க முயற்சித்து வருகிறேன். தற்போது வீட்டில் நேரத்தை செலவிடுவது நன்றாகத்தான் இருக்கிறது. தொடர்ச்சியாக நீண்ட காலம் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும்போது இடைவெளி எப்போது கிடைக்கும் …

Read More »

பெங்களூரு அணியை விட்டு ஒரு போதும் விலகமாட்டேன்- விராட் கோலி உருக்கம்

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு தொடங்கியது. அன்று முதல் இன்று வரை வேறு எந்த அணிக்கும் மாறாமல் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சுக்காக விளையாடி வருபவர், இந்திய கேப்டன் விராட் கோலி. மூன்று முறை இறுதிச்சுற்றுக்கு வந்துள்ள பெங்களூரு அணி ஒரு முறை கூட கோப்பையை வென்றதில்லை. நட்சத்திர வீரர்கள் பலர் இருந்தும் ஏனோ அந்த அணிக்கு ஐ.பி.எல். மகுடம் எட்டாக்கனியாகவே இருக்கிறது. பெங்களூரு அணியின் கேப்டனான …

Read More »

தெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை விராட் கோலி முறியடிப்பார் – பிரெட்லீ நம்பிக்கை

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட்லீ, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சி ஒன்றில் சச்சின் தெண்டுல்கர், விராட் கோலியை ஒப்பீடு குறித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: இந்திய கேப்டன் விராட் கோலி தற்போது விளையாடுவதை போன்று இன்னும் 7-8 ஆண்டுகள் தொடர்ந்து விளையாடினால் சச்சின் தெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை அவரால் முறியடிக்க முடியும். அதற்கு மூன்று விஷயங்களை கோலி கவனிக்க வேண்டி உள்ளது. ஒன்று திறமை. …

Read More »

இவருக்குத்தான் பந்து வீச பயந்தோம்: ஒருசேர கூறும் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட்

இங்கிலாந்து டெஸ்ட் அணியில் நீண்ட காலமாக ஜாம்பவான்களாக திகழும் ஜேம்ஸ் ஆண்டர்சனும், ஸ்டூவர்ட் பிராட்டும் ஒரு பேட்ஸ்மேனை கண்டு அஞ்சி நடுங்கியுள்ளனர். இவருக்குத்தான் பந்து வீச பயந்தோம்: ஒருசேர கூறும் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன் இங்கிலாந்து அணியின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட். இருவரும் நீண்ட காலமாக சிறந்த பந்து வீச்சு ஜோடியாக திகழ்கின்றனர். குறிப்பாக இங்கிலாந்து மண்ணில் …

Read More »

சர்வதேச கிரிக்கட் பேரவை நிறைவேற்று அதிகாரிகளின் ஒன்று கூடல்

கொவிட் 19  பரவிவருகின்ற நிலையில் சர்வதேச கிரிக்கட் போட்டிகளை ஒத்திவைப்பது தொடர்பில் சர்வதேச கிரிக்கட் பேரவையின் பிரதான நிறைவேற்று அதிகாரிகளின் ஒன்று கூடல் நேற்றைய தினம் டுபாயில் நடைபெற்றது. இதன் போது அவுஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த இருபதுக்கு இருபது உலக கிண்ணத்தொடர் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. குறித்த கலந்துரையாடலில் தீர்மானங்கள் எதுவும் எட்டப்படாத நிலையில் ஆலோசனைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

வேல்ஸ் மருத்துவமனைக்கு 4 கோடியே 70 லட்சம் ரூபாய் நிதி வழங்கிய கரேத் பேலே

வேல்ஸ் நாட்டின் கால்பந்து வீரர் கரேத் பேலே (வயது 30), இவர் ஸ்பெயின் நாட்டின் ரியல் மாட்ரிட் அணிக்காக கடந்த 2013-ல் இருந்து விளையாடி வருகிறார். இவர் அங்கிருந்த நேரத்தில் தற்போது வரை ரியல் மாட்ரிட் நான்கு முறை சாம்பியன்ஸ் லீக்கை வென்றுள்ளது. இவர் வேல்ஸ் நாட்டில் உள்ள கார்டிஃப் நகரில் பிறந்தார். தற்போது வேல்ஸ் நாடும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தப்பவில்லை. 8 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ள …

Read More »

இந்திய வீரர்கள் 100 ரன்களுக்கு மேல் அடிக்க இதுதான் காரணம் என போட்டு உடைத்தார் இன்சமாம் உல் ஹக்

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல ஹக். இவர் ரமீஸ் ராஜாவுடன் ஆன்லைன் மூலம் உரையாடினார். அப்போது அவர் விளையாடிய காலத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் அதிக ரன்கள் அடித்தாலும், பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் சிறப்பாகவே விளையாடினோம் எனத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்சமாம் உல் ஹக் கூறுகையில் ‘‘நாங்கள் இந்தியாவுக்கு எதிராக விளையாடும்போது, இந்தியாவின் பேட்டிங் எங்களை விட வலிமையாக பேப்பரில் இருக்கும். ஆனால், எங்களுடைய பேட்ஸ்மேன்கள் 30 அல்லது 40 …

Read More »
error: Content is protected !!