
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிறந்த தீர்வு..!
புற்றுநோய் என்ற வார்த்தை அபாயகரமான ஒன்றாக சமூகத்தில் பார்க்கப்படுகின்றது.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவரை பரிதாபத்திற்குரிய ஒருவராகவும், அனுதாபங்களோடும் பார்க்கும் ஒரு சமூக கட்டமைப்பு மக்கள் மத்தியில் இயற்கையாகவே உருவாகியிருக்கிறது.
ஆனால், புற்றுநோயிலிருந்து பிழைத்து உயிர்வாழும் மக்கள் தொகையினரின் விகிதமும் கூட நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்றது.
புற்றுநோய் சர்வதேச அளவில் பரவி வருவதால் அதற்கான மருந்து மற்றும் புதிய சிகிச்சை முறைகளை கண்டுபிடிப்பதற்காக பரிசோதனை நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் பல ஆய்வுகளை செய்து வருகின்றன.
இதன்படி, கொழும்பு பல்கலைக்கழகத்தின் IBMBB 14 வருடங்களுக்கும் மேலாக இது தொடர்பான பரிசோதனையை நடத்தியுள்ளது.
IBMBB நிறுவனத்தின் பேராசிரியர் சமிரா சமரகோனின் நீண்ட பரிசோதனைகளுக்கு பின்னர் VERNOLAC என்ற புற்றுநோய்க்கான எதிர்ப்பு சக்திக்கான மருந்து அறிமுகப்படுத்தப்படுகின்றது.
இது முற்றிலும் தேசிய மூலப்பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
VERNOLAC புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு அதிலிருந்து மீள்வதற்காக எதிப்புச் சக்தியை வழங்கும் சிறந்த மருந்தாகும்.
VERNOLAC புற்றுநோய் ஸ்டெம் செல்களை இலக்கு வைத்து அழிக்க தயாரிக்கப்பட்ட ஒரு ஊட்டச்சத்து மருந்தாகும்.
இது அதிநவீன அறிவியல் அபிவிருத்தியுடன் இயற்கை பொருட்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.
இது புற்றுநோய் சிகிச்சைக்கு உட்படுத்தப்படும் நபர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உதவுகிறது, அதே நேரத்தில் புற்றுநோயின் பக்க விளைவுகளையும் அதன் சிகிச்சைகளையும் குறைக்கின்றது.