லிட்ரோ எரிவாயு விலைகளில் மாற்றமா..? வெளியான முக்கிய அறிவிப்பு

லிட்ரோ எரிவாயு விலைகளில் மாற்றமா..? வெளியான முக்கிய அறிவிப்பு

லிட்ரோ (Litro) சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளில் இம்மாதம் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படமாட்டாது என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.

கடந்த ஜனவரி 01ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ (Litro) சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

12.5kg: ரூ.685 இனால் அதிகரிப்பு – ரூ. 4,250

5kg: ரூ.276 இனால் அதிகரிப்பு – ரூ.1,707

2.3kg: ரூ.127 இனால் அதிகரிப்பு – ரூ.795

இதேவேளை, லிட்ரோ எரிவாயு நிறுவனம் 2023ஆம் ஆண்டில் அது இலாபமாகப் பெற்றுக்கொண்ட மேலும் 1.5 பில்லியன் ரூபா நிதியை கடந்த ஜனவரி 26ஆம் திகதி வழங்கி வைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.