
வெதுப்பக உற்பத்திகளின் விலையில் மாற்றமில்லை
வெதுப்பக உற்பத்திப்பொருட்களின் விலையினை அதிகரிக்காது தொடர்ந்தும் அதே விலையில் விற்பனை செய்யுமாறு வெளிமாகாண வெதுப்பக உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன் இணைப்பாளர் காமினி கந்தேகெதர இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலையினையும், பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியத்தினையும் கருத்திற்கொண்டு தற்காலிகமாக வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலையினை அதிகரிக்காதிருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த காலப்பகுதியில் புரிந்துணர்வு அடிப்படையில் சகல வெதுப்பக உரிமையாளர்களும் இணைந்து பயணிக்குமாறு வெளி மாகாண வெதுப்பக உரிமையாளர் சங்கத்தின் இணைப்பாளர் காமினி கந்தேகெதர தெரிவித்துள்ளார்.
பாண் ஒன்றின் விலையினை 5 ரூபாவாலும், சகல வெதுப்பக உற்பத்தி பொருட்களை 10 ரூபாவாலும், கேக் கிலோவொன்று 100 ரூபாவாலும் இன்று முதல் அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்தன முன்னதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.