வலைபாயுதே

யாழில் 100வருடங்கள் பழமையான பொருள்கள்😱 |..

யாழில் 100வருடங்கள் பழமையான பொருள்கள்😱 | 81வயது தா..

5 வயதில் உலக சாதனை! யாழ்ப்பாண சிறுமி செய..

5 வயதில் உலக சாதனை! யாழ்ப்பாண சிறுமி செய்ததை பார்த..

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ தேரி..

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ தேரிலே காட்சிய..

லைப்ஸ்டைல்

புதிய ஆடைகளை வாங்கி வந்து அப்படியே அணிகி..

கடையில் வாங்கும் புதிய ஆடைகள் சுத்தமானவை என்று பெரும்பாலான மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில், அவை தொழிற்சாலையிலிருந்து கடைக்கு வரும் வரை பல கட்டங்களைக் கடந்து வருகின்றன. நீங்கள் புதிய ஆடைகளை வாங்கும்போது, ​​அவற்றை உடனடியாக அணிந்து பார்க்க வேண்டும் என்று ஆசை வருவது இயல்பானது. கடையில் இருந்து வாங்கிய ஆடைகள் பளபளப்பாகவும், புதியதாகவும் , மிகவும் சுத்தமாகத் தெரிந்தாலும், அவற்றுக்குப் பின்னால் ஒரு கசப்பான உண்மை மறைந்துள்ளது! ஏனென்றால், ஆடை உற்பத்தி ஆலைகளில் இருந்து உங்கள் கைகளுக்கு வருவதற்குள், அவை பல கைகளை தாண்டி பயணித்து வருகின்றன. அப்படியிருக்க, கடையில் இருந்து வாங்கிய ஆடைகளைத் துவைக்காமல் நேரடியாக அணிந்தால், உங்கள் சருமத்திற்கு தீங்காக கருதப்படுகிறது. அப்படி என்னென்ன பிரச்சனைகள் வரும் என்பதை பார்க்கலாம். புதிய ஆடைகள் உண்மையிலேயே சுத்தமானவையா? கடையில் வாங்கும் புதிய ஆடைகள் சுத்தமானவை என்று பெரும்பாலான மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில், அவை தொழிற்சாலையிலிருந்து கடைக்கு வரும் வரை பல கட்டங்களைக் கடந்து வருகின்றன. இந்தச் செயல்பாட்டின் போது, ​​சுருக்கங்கள் ஏற்படுவதைத் தடுக்கவும், அனுப்பப்படும்போது ஆடைகள் சேதமடைவதைத் தடுக்கவும் ஃபார்மால்டிஹைட் ரெசின்கள் போன்ற இரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதன்படி, இந்த இரசாயனங்கள் ஆடைகளுக்குப் புதிய தோற்றத்தைக் கொடுத்தாலும், சருமத்திற்கு மிகவும் தீங்கு விளைவிப்பவை. எனவே, அவற்றை துவைக்காமல் அணிவதால் சருமத்தில் அரிப்பு, சிவந்த புள்ளிகள் அல்லது ஒவ்வாமை தோல் அழற்சி போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். இந்த இரசாயனங்கள், குறிப்பாக உணர்திறன் மிக்க சருமம் உள்ளவர்களுக்கு, கடுமையான ஒவ்வாமைகளை உண்டாக்கக்கூடும். கண்ணுக்குப் புலப்படாத கிருமிகள் : பலர் கடைகளில் ஆடைகளை வாங்குவதற்கு முன் அவற்றை அணிந்து டிரையல் பார்க்கிறார்கள். இதனால், ஆடைகளில் வியர்வை, பாக்டீரியா, பூஞ்சைகள் மற்றும் சில வைரஸ்கள் படியக்கூடும். ஒருவர் அணிந்து பார்த்த ஆடைகளைத் துவைக்காமல் நீங்கள் அணிந்தால், அவருடைய தோலில் இருந்த நோய்த்தொற்றை உங்களுக்கும் பரவக்கூடும்.