
தீர்வை வாி செலுத்தாது நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட மஞ்சள் கண்டுபிடிப்பு!
தீர்வை வாி செலுத்தாது இந்நாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட மேலும் 847 கிலோ கிராம் மஞ்சளுடன் சந்தேக நபர்கள் இருவர் நேற்று (14) பிற்பகல் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் ஒருவர் சிலாபம் - பங்கதெனிய பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர் வசமிருந்த 200 கிலோ கிராம் மஞ்சளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதேவேளை மன்னார் - சிலாவத்துறை - அாிப்பு கடற் பிரதேசத்தில் மேலும் 647 கிலோ கிராம் மஞ்சளுடன் நபரொருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பங்கதெனிய மற்றும் சிலாவத்துறை பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.