மன்னாரில் மேலும் ஒரு தொகை கஞ்சா போதைப்பொருள் மீட்பு

மன்னாரில் மேலும் ஒரு தொகை கஞ்சா போதைப்பொருள் மீட்பு

மன்னாரில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மேலும் ஒரு தொகை கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மன்னார்-  சின்னக்கருசல் பகுதியில் சுமார் 6 கிலோ கிராம் எடை கொண்ட கேரளா கஞ்சா பொதிகளுடன் குறித்த கிராமத்தைச் சேர்ந்த 32 வயதுடைய  ஒருவர் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, மன்னார் மாவட்ட பொலிஸ் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டார்.

குறித்த சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து மன்னார் பகுதியில் பதுக்கி வைத்திருந்த மேலும் ஒரு தொகுதி கேரளா கஞ்சா பொதிகளை நேற்று (வெள்ளிக்கிழமை)மாலை மன்னார் மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

இதன்போது 45 கிலோ 325 கிராம் கேராளா கஞ்சாப் பொதிகளே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன .

இந்நிலையில், குறித்த சந்தேகநபர் மற்றும் கைப்பற்றப்பட்ட கஞ்சா அனைத்தும் மேலதிக விசாரணையின் பின் மன்னார் மாவட்ட நீதிமன்றில் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட கஞ்சா போதைப்பொருள் சுமார் 45 இலட்சம் ரூபாய் பெறுமதி வாய்ந்தது என பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.