Breaking News
Home / latest-update / திடீரென உடைந்து வீழ்ந்த பனிச் சிற்பம்..! நசுங்கிப் பலியான பச்சிளம் குழந்தை..!!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

திடீரென உடைந்து வீழ்ந்த பனிச் சிற்பம்..! நசுங்கிப் பலியான பச்சிளம் குழந்தை..!!

ஐரோப்­பிய நாட்டில் பனிச் சிற்பம் திடீ­ரென உடைந்து, அதன் அருகில் நின்று கொண்­டி­ருந்த 2 வயது ஆண் குழந்­தையின் மீது விழுந்­தது. இதில், அந்த குழந்தை உடல் நசுங்கி பரி­தா­ப­மாக இறந்­தது.கிறிஸ்மஸ் பண்­டிகை எதிர்­வரும் டிசம்பர் மாதம் 25ஆம் திகதி உலகம் முழு­வதும் கொண்­டா­டப்­பட இருக்­கி­றது. ஐரோப்­பிய நாடு­களைச் சேர்ந்த கிறிஸ்­த­வர்கள் இப்­போ­தி­லி­ருந்தே கிறிஸ்மஸ் பண்­டி­கைக்கு தயா­ராகி வரு­கின்­றனர்.அந்த வகையில், ஐரோப்­பிய நாடு­களில் ஒன்­றான லக்­சம்­பர்க்கில் கிறிஸ்மஸ் பண்­டி­கை­யை­யொட்டி சிறப்பு சந்­தைகள் உரு­வாக்­கப்­பட்டு கிறிஸ்மஸ் மரம் உள்­ளிட்ட அலங்­கார பொருட்கள் மற்றும் கைவினை பொருட்கள் விற்­பனை செய்­யப்­ப­டு­கின்­றன.இந்த நிலையில், தலை­நகர் லக்­சம்­பர்க்கில் உள்ள சந்­தையில் நேற்று முன்­தினம் இரவு ஏரா­ள­மான மக்கள் பண்­டி­கைக்கு தேவை­யான பொருட்­களை வாங்கி கொண்­டி­ருந்­தனர்.அப்போது, சந்­தையில் பார்­வை­யா­ளர்­களை கவ­ரு­வ­தற்­காக வைக்­கப்­பட்­டி­ருந்த பனி சிற்பம் திடீ­ரென உடைந்து, அதன் அருகில் நின்று கொண்­டி­ருந்த 2 வயது ஆண் குழந்­தையின் மீது விழுந்­தது. இதில், அந்த குழந்தை உடல் நசுங்கி பரி­தா­ப­மாக இறந்­தது. இந்த பனி சிற்பத்தை உருவாக்கிய பிரான்ஸை சேர்ந்த சிற்பியிடம் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Check Also

தர்பார் படத்தின் இசை வெளியிடும் தேதி அறிவிப்பு

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘தர்பார்’ படத்தின் இசை வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தர்பார் படத்தின் இசை …